இந்திய சினிமாவை மிகவும் பிரபலமான இயக்குனராக இருக்கும் எஸ்.எஸ்.ராஜமௌலி பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர். இவர் இயக்கத்தில் சமீபாத்தில் வெளியான படம் RRR. இப்படத்தை டிவிவி என்டர்டைமென்ட் தயாரிக்க ராம் சரண் மற்றும் என்.டி.ஆர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்க RRR படம் பெரிய ஹிட் அடித்தது. அதிலும் இப்படத்தில் வரும் “நாட்டு நாட்டு” பாடல் திரைத்துறையில் மிகச்சிறந்த விருதான ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இந்நிலையில் தான் கடந்த திங்கள் கிழமை இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு அமெரிக்காவில் நடைபெற்ற 95வது ஆஸ்கர் விழாவில் சிறந்த பாடலுக்கான விருதை RRR படத்தின் “நாட்டு நாட்டு” பாடல் தட்டிச் சென்றது. இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் ஆஸ்கார் விருதை பெற்றனர். அதோடு இந்தியாவில் இருந்து சிறந்த இசையமைப்பாளருக்கான விருது பெற்ற இரண்டாவது நபராக எம்.எம்.கீரவாணி உள்ளார். இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானது “அழகன்” என்ற திரைப்படத்தின் மூலம் தான்.

Advertisement

தமிழ் சினிமாவில் இளையராஜா இல்லை என்றா தமிழ் சினிமா இல்லை என்ற காலத்தில், இளையராஜா ஒரு படத்தில் இசையமைக்கிறார் என்றாலே படத்திற்கான வரவேற்பு அதிகரிக்கும், அதே சமயம் இளையராஜாவிடம் கால்ஷீட் வாங்கிவிட்டுதான் படத்தின் மற்ற வேலைகளையே தொடங்குவார்கள். அந்த அளவிற்கு இருந்த காலத்தில் இளையராஜா இல்லாமல் வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்திரர் அவர்கள்.

அந்த காலத்தில் தமிழ் சினிமா என்றாலே இளையராஜா தான் என்று இருந்த போது பாலசந்திரர் மட்டும் மற்ற இசையமைப்பாளர்களை நாடினார். ஆனால் “சிந்து பைரவி” என்ற படத்தில் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றினார். பின்னர் “புதுப்புது அர்த்தங்கள்” படத்திற்கு புறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால் பிரிந்த பாலச்சந்திரார். ஆனால் இருவரும் பிரிந்தாலும் கூட பொதுவாக யாரையும் அதிகமாக பாராட்டாத இளையராஜா இயக்குனர் பாலச்சந்திரரை வெளிப்படையாகவே பாராட்டியுள்ளார். அதுவும் அவர் பிரிந்த பிறகு.

Advertisement

இந்நிலையில் இளையராஜாவிடம் இருந்து பிரிந்த பிறகு பாலச்சந்திரர் புதிய இசையமைப்பாளரை தேடிக்கொண்டிருக்கையில் கிடைத்தவர் தான் தெலுங்கு சினிமாவில் பிரபலமான இருந்து தற்போது ஆஸ்கர் வாங்கியுள்ள எம்.எம்.கீரவாணி. இவர் தமிழ் சினிமாவில் கடந்த 1991ஆம் ஆண்டு மரகதமணி என்ற பெயரில் “அழகன்” என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினர். இப்படத்தில் வரும் “சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா” என்ற பாடல் இன்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. அந்த அளவிற்கு பின்னணி இசை கொடுத்து மிரட்டியிருந்தார்.

Advertisement

இந்நிலையில்தான் RRR படத்தில் இவர் இசையமைத்துள்ள “நாட்டு நாட்டு” பாடலுக்கு திரைத்துறையின் உயரிய விருதான ஆஸ்கார் கிடைத்துள்ளது. இவரை தவிர்த்து இளையராஜாவுக்காக எதிராக இன்னொரு இசையமைப்பாளரை “ரோஜா” படத்தில் களமிறக்கினார். அவர் தான் “ஸ்லாம்டாக் மில்லியனர்” படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளை தட்டி சென்ற ஏ.ஆர்.ரகுமான். இப்படி இளையராஜா இல்லை என்றால் தமிழ் சினிமா இல்லை என்ற காலத்தில் இரண்டு ஆஸ்கார் நாயகர்களை களமிறங்கி மறைமுகமாக இளையராஜாவுக்கு பதிலடி கொடுத்தவர் இயக்குனர் சிகரம் பாலச்சந்திரர் ஆவர்.

Advertisement