பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான்.! அடித்து சொல்லும் வேர்ல்ட் கப் ஜோதிடர்.! இரண்டாம் இடம் யார் தெரியுமா?

By Rajkumar · 5/9/2019

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த உலக கோப்பை தொடரின் போது அணி வெல்லும், யார் தொடர் நாயகன் விருதை வெல்வார் என்று புட்டு புட்டு வைத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் ஜோதிடர் பாலாஜி ஹாசன். உலக கோப்பை தொடருக்கு பின்னர் இவர் வேர்ல்ட் கப் ஜோதிடர் என்று பிரபலமடைந்தார்.

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்துள்ள பாலாஜி, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘விஹாரி வருட பலன்கள்’ என்ற நிகழ்ச்சியில் வருங்காலத்தை குறித்த நிகழ்வுகளை கணித்து கூறி வருகிறார். இவர் கூறும் கணிப்புகள் ஒவ்வொன்றும் சரியாகவே நடக்கிறது. சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில் நரேந்திர மோடி தான் பெரும்பான்மையைப் குவித்து வெற்றி பெறுவார் என்று அவர் கணித்திருந்தது அப்படியே பலித்து இருந்தது.

இதையும் பாருங்க : 38 வயதிலும் இப்படி ஒரு ஆடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை உறைய வைத்த கிரண்.! 

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பாலாஜியிடம் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அப்போது பேசிய பாலாஜி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் தான் வெற்றி பெறுவார் என கூறியுள்ளார். மேலும், இரண்டாவது இடத்தை ஒரு பெண் தான் பிடிப்பார் என்றும் கூறியுள்ளார் பாலாஜி.

பிக்பாஸ் நிகழ்ச்சி, ஆரம்பிக்கப்பட்ட தேதி, நேரம், இடம் ஆகியவற்றை வைத்து இந்த ஜோதிடத்தை கணித்துள்ளதாகவும் கூறியுள்ளார் பாலாஜி. எனவே, பாலாஜி கூறியதை வைத்து பார்க்கும் போது முதல் இடத்தை தர்ஸன் அல்லது முகென் பிடிப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதே போல இரண்டாம் இடத்தை பெண் போட்டியாளர் பிடிப்பார் என்று கூறியுள்ளார்.

தற்போது பிக் பாஸ் வீட்டில் வனிதா, ஷெரின், லாஸ்லியா ஆகிய மூன்று பேர்கள் தான் இருக்கின்றனர். இதில் வனிதா கண்டிப்பாக இரண்டாம் இடத்தை பிடிக்க வாய்ப்பில்லை. எனவே, ஷெரின் அல்லது லாஸ்லியா இருவரில் யாராவது இரண்டாம் இடத்தில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக கோப்பை தொடரில் இவர் சொன்ன கணிப்புகள் அனைத்தும் ஓரளவிற்கு நடந்தது எனவே, பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் இவரது கணிப்பு கண்டிப்பாக வெற்றி பெறுமா என்பதை இன்னும் ஒரு 25 நாளில் நாம் பார்த்துவிடலாம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full