உன்னை உடைக்கிற நாட்கள் தான் உன்னை உருவாக்கும் நாட்கள்-பாலாஜி முருகதாஸின் உருக்கமான பதிவு

By subhashini · 22/2/2025

தனக்கு ஏற்பட்ட விபத்து குறித்து நடிகர் பாலாஜி போட்டிருக்கும் உருக்கமான பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் 4’ல் கலந்து கொண்டு இரண்டாம் பாஸ் பிடித்தார். ஆனால், இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு எந்த ஒரு பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இதனால் இவர் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருந்தார்.

அந்த நிகழ்ச்சியில் பாலாஜி டைட்டில் வின்னரும் ஆனார். அதனைத் தொடர்ந்து இவர் சில படங்களில் நடித்தார். சமீபத்தில் இவர் ‘ஃபயர்’ என்னும் படத்தில் நடித்திருந்தார். தயாரிப்பாளரும், நடிகருமான ஜே.சதீஷ்குமார் இயக்கத்தில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இது தான் இவர் இயக்குனராக அறிமுகம் ஆன முதல் படம். இதில் ரக்ஷிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், சாந்தினி தமிழரசன், ஷா, சுரேஷ் சக்கரவர்த்தி, சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்து இருக்கிறார்கள்.

ஃபயர் படம்:

மேலும், ஜே.எஸ்.கே பிலிம்ஸ் கார்ப்பரேஷன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு, டி.கே இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் நான்கு பெண்களை மையமாக வைத்து தமிழ்நாட்டில் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. காசி என்ற ஒரு டாக்டர் பல பெண்களுடைய வாழ்க்கையில் விளையாடி இருக்கிறார். அந்த டாக்டர் கதாபாத்திரத்தில் தான் பாலாஜி முருகதாஸ் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது.

பாலாஜி முருகதாஸ்:

இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பாலாஜி முருகதாஸ் போட்டு இருக்கும் பதிவு தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதில் அவர், பொதுவாகவே என்னுடைய பர்சனல் விஷயங்களை பற்றி நான் எப்போதுமே சோசியல் மீடியாவில் சொல்ல மாட்டேன். ஆனால், இப்போது ஒரு நல்ல காரணத்திற்காக தான் இந்த பதிவை போட்டு இருக்கிறேன். ஒரு வருடத்திற்கு முன்பு எனக்கு விபத்து ஒன்று நடந்தது. அதில் என்னுடைய முதுகெலும்பு வீங்கி விட்டது. அந்த சமயத்தில் நான் ரொம்பவே கஷ்டப் பட்டேன். என்னால் ஆறு மாதம் சரியாக நடக்க கூட முடியவில்லை.

View this post on Instagram

A post shared by Balaji Murugadoss (@officialbalakrish)

விபத்து பற்றி சொன்னது:

நான் பத்துக்கும் அதிகமான மருத்துவர்களை பார்த்து ஆலோசித்தேன். ஆனால் எதுவுமே சரி வரவில்லை. இதனால் நான் ரொம்பவே உடைந்து விட்டேன். இடுப்பு, கால் வலி இருந்துமே வின்னர் படத்தில் வரும் வடிவேலு மாதிரி நடக்க ஆரம்பித்தேன். திடீரென்று ஒரு நாள் எனக்கு வலி சுத்தமாக போனதை உணர்ந்தேன். இப்போது நான் நன்றாக இருக்கிறேன். என்னுடைய பயர் படம் வெற்றிகரமாக திரையரங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தினுடைய வெற்றியை என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. என் மீது கருணை காட்டும் இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி. உன்னை உடைக்கிற நாட்கள் தான் உன்னை உருவாக்கும் நாட்கள் என்று கூறியிருக்கிறார்.

படத்தின் கதை:

படத்தில் பிசியோதெரபி ஆக இருக்கும் பாலாஜியை காணவில்லை என்று அவருடைய பெற்றோர்கள் போலீசில் புகார் அளிக்கிறார்கள். பின் தீவிரமாக போலீசும் அந்த வழக்கை விசாரிக்கிறார்கள். அப்போது தான் விசாரணையில் நான்கு பெண்களை பற்றிய விவரம் தெரிய வருகிறது. பாலாஜி அந்த பெண்களுடன் நெருக்கமாக இருந்து அதை வீடியோவாக எடுத்து மிரட்டி பணம் வாங்கி இருக்கிறார். இந்த அதுமட்டுமில்லாமல் நிறைய பெண்கள் பாலாஜியால் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்து இருக்கிறது. இன்னொரு பக்கம் பாலாஜி முருகதாஸை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என்று அமைச்சரும் அழுத்தம் கொடுக்கிறார். அதற்குப் பிறகு என்ன நடந்தது? குற்றவாளியை போலீஸ் கண்டுபிடித்தார்களா? பாலாஜியின் நிலை என்ன? என்பதுதான் படத்தின் உடைய மீதி கதை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full