தனது படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் சொன்ன இளைஞர்களுக்கு வந்த சோதனை - சர்ச்சையில் சிக்கிய பிக் பாஸ் பிரபலம்

By subhashini · 20/2/2025

பாலாஜி முருகதாஸின் படத்திற்கு ரிவ்யூ கொடுத்த ரசிகர்களுக்கு ஏற்பட்ட சோதனை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் 4’ல் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்தார். ஆனால், இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு எந்த ஒரு பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.
இதனால் இவர் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருந்தார்.

அந்த நிகழ்ச்சியில் பாலாஜி டைட்டில் வின்னரும் ஆனார். அதனைத் தொடர்ந்து இவர் சில படங்களில் நடித்தார். சமீபத்தில் இவர் ‘ஃபயர்’ என்னும் படத்தில் நடித்திருந்தார். தயாரிப்பாளரும் நடிகருமான ஜே.சதீஷ்குமார் இயக்குனராக அறிமுகம் ஆன படம் தான் ‘ஃபயர்’. இதில் ரக்ஷிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், சாந்தினி தமிழரசன், மகாலட்சுமி, ஷா, சுரேஷ் சக்கரவர்த்தி, சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்து இருக்கிறார்கள்.

ஃபயர் படம்:

மேலும், ஜே.எஸ்.கே பிலிம்ஸ் கார்ப்பரேஷன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு, டி.கே இசையமைத்துள்ளார். சதீஷ். ஜி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படம் நான்கு பெண்களை மையமாக கொண்டு தமிழ்நாட்டில் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. காசி என்ற ஒரு டாக்டர் பல பெண்களுடைய வாழ்க்கையில் விளையாடி இருக்கிறார். அந்த டாக்டர் கதாபாத்திரத்தில் தான் பாலாஜி முருகதாஸ் நடித்திருக்கிறார்.

படம் குறித்த தகவல்:

படத்தில் பிசியோதெரபி ஆக இருக்கும் பாலாஜியை காணவில்லை என்று அவருடைய பெற்றோர்கள் போலீசில் புகார் அளிக்கிறார்கள். பின் தீவிரமாக போலீசும் அந்த வழக்கை விசாரிக்கிறார்கள். அப்போதுதான் விசாரணையில் நான்கு பெண்களை பற்றிய விவரம் தெரிய வருகிறது.
பாலாஜி அந்த பெண்களுடன் நெருக்கமாக இருந்து அதை வீடியோவாக எடுத்து மிரட்டி பணம் வாங்கி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் நிறைய பெண்கள் பாலாஜியால் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரிய வருகிறது.

பாலாஜி முருகதாஸ் வீடியோ:

அதுமட்டுமில்லாமல் பாலாஜி முருகதாஸை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என்று அமைச்சரும் அழுத்தம் கொடுக்கிறார். அதற்குப் பிறகு என்ன நடந்தது? குற்றவாளியை போலீஸ் கண்டுபிடித்தார்களா? பாலாஜியின் நிலை என்ன? என்பதுதான் படத்தின் உடைய மீதி கதை. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் பாலாஜி முருகதாஸ் அவர்கள் காரில் சென்று கொண்டிருக்கும்போது பைக், ஆட்டோவில் சென்று கொண்டிருந்த நபர்களிடம் பயர் படம் பற்றி கேட்டிருக்கிறார்.

View this post on Instagram

A post shared by Polimer News (@polimernews)

போலீஸ் கண்டனம்:

அவர்கள் எல்லோரும், படம் சூப்பர். நன்றாக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள். இதை பாலாஜி வீடியோவாக எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்த போக்குவரத்து காவல்துறை, பைக்கில் செல்லும் இரண்டு நபர்கள் ஹெல்மெட் போடாமல் விதியை மீறி சென்றிருக்கிறார்கள் என்று அவர்களுக்கு ஃபைன் போட்டு இருக்கிறார்கள். இதை பார்த்த பாலாஜி முருகதாஸ், தன்னால்தான் தன்னுடைய ரசிகர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்பட்டது என்று மன்னிப்பு கேட்டு அவர்களுடைய பைனையும் கட்டி இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள், சொந்த காசுலேயே பாலாஜி சூனியம் வைத்துக்கொண்டார் என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full