தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகரான விஜய் தேவர்கொண்ட நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த அர்ஜுன் ரெட்டி படம் தெலுங்கு சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கில் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் இந்த படம் வெகுவாக கவர்ந்திருந்தது. இந்த படத்தை இயக்குனர் பாலா ‘வர்மா’ என்ற பெயரில் ரீ-மேக் செய்ய விக்ரம் மகன் துருவ் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் முதல் ட்ரைலர் வரை அனைத்தும் வெளியான நிலையில் இந்த படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாக இருந்தது.

ஆனால், படத்தின் இறுதி ரிசல்ட் திருத்திகாரமாக இல்லை என்றும் படத்தில் சில மாற்றங்களை செய்ய பாலா மறுத்துவிட்டார் அதனால் படத்தை வெளியிடபோவது இல்லை என்று இ4 நிறுவனம் அறிவித்தது. இந்த நிலையில் தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தில் இயக்கத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய கிரிசாயா என்பவரை வைத்து இந்த படத்தினை ‘ஆதித்திய வர்மா’ என்ற தலைப்பில் வெளியிட்டனர்.

Advertisement

இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படம் வெளியான போதே இந்த படத்தினை ‘அர்ஜுன் ரெட்டி’ படத்துடன் ஒப்பிட்டு ரசிகர்கள் கலாய்த்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் இயக்குனர் பாலா பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் வர்மா திரைப்படத்தை OTT தளத்தில் வெளியிட்டார்.

இந்த திரைப்படம் இன்று (அக்டோபர் 6) வெளியானது. ஆனால், இந்த படத்தை பார்த்த பலரும் அர்ஜுன் ரெட்டி படத்தை விட இந்த படம் மோசமாக இருப்பதாக கூறி வருகின்றனர். மேலும், விக்ரம், வர்மா படத்தை வேண்டாம் என்று கூறி தனது மகனின் வாழ்க்கையை காப்பாற்றி விட்டார். பாலா ஒரு நல்ல இயக்குனர் ஆனால், ரீ-மேக் சிவத்தில் கிடையாது என்றெல்லாம் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement
Advertisement