பெண்களை அவமதிக்கும் போஸ்டர் , சசிகுமார் படத்திற்கு தடை விதிக்க கோரிக்கை - முழு விவரம் இதோ

By subhashini · 30/1/2025

சசிகுமார் நடிக்கும் மை லார்ட் படத்திற்கு தடை விதிக்க கோரிக்கை வைத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சசிகுமார் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். தற்போது சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மை லார்ட். இந்த படத்தை இயக்குனர் ராஜி முருகன் இயக்கி இருக்கிறார்.

இவர் ஏற்கனவே கார்த்திக் நடிப்பில் வெளியாகியிருந்த ஜப்பான் என்ற படத்தை இயக்கியிருந்தார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதை தொடர்ந்து தற்போது இவர் சசிகுமாரை வைத்து மை லார்ட் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சைத்ரா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஆர்ச்சர், குரு சோமசுந்தரம், ஆஷா சரத், கோபி நயினார் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

மை லார்ட் படம்:

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை ஒலிம்பியா மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. மேலும், இந்த படத்தினுடைய படப்பிடிப்பு கோவில்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தான் நடைபெற்று வருகிறது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. அந்த போஸ்டரில் ரொம்ப எளிமையான மனிதர்களைப் போல சசிகுமார், சைத்ரா இருக்கிறார்கள்.

படத்திற்கு தடை:

இருவருமே பீடியை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக சமூக ஆர்வலர் செல்வம் என்பவர் சென்னை காவல் ஆணையத்தில் புகார் ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், சசிகுமார் நடிக்கும் மை லார்ட் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கதையினுடைய நாயகன், நாயகி இருவருமே சேர்ந்து புகை பிடிப்பது போல இருக்கிறது. இந்த போஸ்டர் பெண்களை அவமதிக்கும் விதமாக இருக்கிறது. அதனால் இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த சம்பவம் தான் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சசிகுமார் திரைப்பயணம்:

இயக்குனர் இவர் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சுப்பிரமணியபுரம்’ படம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. முதல் படத்திலிலேயே இவர் இயக்குனராகவும் நடிகராகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இவர் சமுத்திரக்கனியின் நடிப்பில் வெளிவந்த ‘ஈசன்’ என்ற படத்தை எடுத்திருந்தார். அதற்குப் பிறகு இவர் நடிகராக மட்டும் தான் நடித்து வந்தார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் கடந்த ஆண்டு சசி குமார் நடிப்பில் வெளியாகி இருந்த படம் ‘நந்தன்’. இந்தப் படத்தை இரா. சரவணன் இயக்கி இருந்தார்.

சசிகுமார் குறித்த தகவல்:

மேலும், நந்தன் படத்தில் சமுத்திரக்கனி, ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பட்டியல் இன மக்கள் ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் போது என்னவெல்லாம் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை மையமாக வைத்து இயக்குனர் கொடுத்திருக்கிறார். இந்த படத்தை பார்த்து பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பலர் பாராட்டி இருந்தார்கள். இதைத்தொடர்ந்து சசிகுமார் அவர்கள் டூரிஸ்ட் பேமிலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். சில மரங்களுக்கு முன்புதான் இந்த படத்தினுடைய டீசர் வெளியாகி இருந்தது. இது தவிர இவர் எவிடன்ஸ், பகைவனுக்கு அருள்வாய் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full