வீட்டுக்கு சீல் வச்சிட்டாங்க, நடுரோட்டுல இருக்கேன் - கண் கலங்கும் நடிகர் ராஜசேகர் மனைவி தாரா
தென்னிந்திய சினிமா உலகில் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டங்களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ராஜசேகர். இவர் நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட இயக்குனர், ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி இருந்தார். பின் இவர் சின்னத்திரையில் நடிகராகவும் நடித்து இருந்தார். இதனிடையே இவர் தாரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்படி ஒரு நிலையில் நடிகர் ராஜசேகர் அவர்கள் 2019ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார். இறப்பதற்குள் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது தான் இவரின் கடைசி ஆசையாம்.
இதனால் அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு தான் சென்னை வடபழனியில் 500 சதுர அடியில் ஒரு பிளாட்டை வாங்கி இருந்தார். ஆனால், அந்த வீட்டில் வாங்கி குடியேறுவதற்குள் ராஜசேகர் இறந்துவிட்டார். அதனைத் தொடர்ந்து அவருடைய உடல் மட்டுமே சில மணி நேரம் அந்த வீட்டில் வைக்கப்பட்டு எடுத்து செல்லப்பட்டது. தற்போது உறவுகளின் ஆதரவு இல்லாத நிலையில் தனி மனுஷியாக வேதனையில் இருக்கிறார் தாரா. இவர் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில் அவர் சம்பாதித்த மொத்த பணத்தையும் குடும்பத்துக்காக செலவு செய்து விட்டார். அதோடு பேங்கில் மீதி பணம் கட்ட சொல்லி டார்ச்சர் செய்கிறார்கள் என்று கடந்த ஆண்டு பேட்டியில் கூறி இருந்தார்.
ராஜசேகர் மனைவி பேட்டி:
மேலும், கடன் கொடுத்த வங்கி ராஜசேகரன் வீட்டை ஏலத்தில் விட முயற்சித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இது தொடர்பாக ராஜசேகரின் மனைவி தாரா பேட்டியில், பேங்கில் கடன் வாங்கும் போது அவருக்கும் எனக்கும் வயதாகிவிட்டது. அப்பவே அவரிடம் கடன் வாங்கி வீடு எல்லாம் வாங்க வேண்டாம். இருக்கிற கொஞ்ச காலத்தை வாடகை வீட்டிலேயே இருந்து போயிடலாம் என்று சொன்னேன். அவர் தான் கேட்கவே இல்லை. பேங்கில் எந்த அடிப்படையில் அவருக்கு கடன் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. என்னையும் ஜாயின்ட் போட்டு தான் லோன் வாங்கினார் . வீடு என் பெயரில் தான் பதிவானது. புதுசா வாங்கின வீட்டுக்கு குடியேற கூட இல்லை. அதுக்குள்ளே அவர் இறந்துவிட்டார். அவர் இறந்த பின் பேங்கில் வந்தார்கள் நிறைய பேப்பரில் கையெழுத்து வாங்கி வீடு உங்களுக்கு கிடைக்கிற மாதிரி செய்கிறோம் என்று சொன்னார்கள்.
வங்கியில் செய்த வேலை:
நானும் மிச்ச கடன் எவ்வளவு இருக்கு என்று சொன்னால் வேலூரில் எனக்கு இருக்கிற ஒரு சொத்தை வித்தாவது கடனை அடைத்து அவர் ஆசைப்பட்டு வாங்கிய வீட்டில் குடியேறலாம் என்று நினைத்தேன். ஆனால், பேங்கில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. நாட்கள் தான் ஆனதே தவிர என் வீட்டு விஷயத்தில் ஒரு நல்லதும் நடக்கவில்லை. நான் போய் கேட்கும் போதெல்லாம் சரியான பதிலும் கொடுப்பதில்லை. கடைசியில் வீட்டை ஏலத்தில் வங்கி விட்டதாக தகவல் வந்தது. கடன் எவ்வளவோ அதை அடைத்து விட்டு மீதி பணத்தை தந்திடுவார்கள் என்று சொன்னார்கள். நான் மீதி எவ்வளவு கட்ட வேண்டியிருக்கு என்று சொல்லாமல் ஏலத்தில் விட முடிவெடுத்து இருக்கிறார்கள். எனக்கு பிள்ளைகள் என்று யாரும் இல்லை. கோர்ட்டில் இருந்து காலி செய்ய சொல்லி ஆர்டர் வாங்கிட்டோம் என்று சொன்னார்கள். ஆனால், அப்படி ஒரு ஆர்டர் எப்படி தந்தாங்க என்று தெரியவில்லை என்று மன உளைச்சலில் தாரா பேசியிருந்தார்.
தாரா வீடு சீல்:
மேலும், அந்த கடனை செலுத்துவதற்கு வங்கியில் அவகாசம் கேட்டதாகவும், வேறு ஒரு சொத்தை விற்று கடனை அடைப்பதாகவும் தாரா கூறி இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் இன்று நீதிமன்ற ஊழியர்கள், தாராவுக்கு கடன் தந்த வங்கி ஊழியர்கள் என பத்துக்கும் மேற்பட்டோர் போலீஸ் பாதுகாப்புடன் தாராவின் வீட்டுக்கு வந்து வீட்டை சீல் வைத்து இருக்கிறார்கள். பின் இது தொடர்பாக நீதிமன்றம் சார்பில் அளித்த பேட்டியில், கடனை செலுத்தாததால் தான் இந்த நடவடிக்கை எடுத்து இருக்கிறோம். வங்கி ஏற்கனவே இந்த வீட்டை வேறு ஒருவருக்கு விற்பனை செய்திருக்கிறது. வாங்கிய நபர் வீட்டை வாங்கிய தர கேட்கிறார். அவருக்கு வீடு கிடைக்காததால் கோர்ட்டுக்கு வந்திருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=nDKhpAS_Ta8
வேதனையில் தாரா சொன்னது:
கோர்ட்டு காவல்துறைக்கும் வங்கியின் நிர்வாகத்துக்கும் வீட்டை வாங்கி தரச் சொல்லி உத்தரவு போட்டு இருக்கிறது. அந்த உத்தரவை நிறைவேற்ற தடையாக இருந்தார் தாரா. அந்த வழக்கு திரும்பவும் இன்னைக்கு வருகிறது. அதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தவிர்க்கவே இந்த நடவடிக்கை. வங்கி மறைந்த நடிகருக்கு எந்த அடிப்படையில் கடன் வழங்கியது என்ற கேள்விகளுக்கு வங்கி தான் பதில் தர முடியும் என்று சொல்லி இருக்கிறார்கள். இதை அடுத்து வங்கி அதிகாரிகள், எதுவாக இருந்தாலும் வங்கிக்கு வந்து பேசுங்க சார். நான் திரும்ப இவர்களையும் நீதிமன்றம் போய் முயற்சி செய்ய சொல்லுங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். அதற்கு பின் பேட்டி அளித்த தாரா, என்ன செய்வதென்று தெரியவில்லை. இன்னைக்கு நடுரோட்டில் இருக்கிறேன். நடிகர் சங்கம், டிவி நடிகர் சங்கம் யாராவது உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று கதறி அழுகிறார்.