குந்தவை கெட்டப் போட்டது மட்டுமல்லாமல் பொன்னியின் செல்வன் பாடலுக்கு அதே கெட்டப்பில் டான்ஸ் ஆடிய பாரதி கண்ணம்மா பிரபலம்.

By Rajkumar · 10/10/2022

குந்தவை கெட்டபில் வெளியாகி இருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலத்தின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவின் பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை தற்போது திரைப்படமாக இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருக்கிறார். இந்த கதையை பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் தான் சாதித்து காட்டி இருக்கிறார்.

பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரை வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், இந்த கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரகுமான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

பொன்னியின் செல்வன் படம்:

இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த பொன்னியின் செல்வன் படம் சமீபத்தில் தான் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. மேலும், தமிழ் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக சினிமா ரசிகர்களும் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

படத்தின் வசூல்:

படம் வெளியாகி ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என அனைவரும் மத்தியிலும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. அதோடு படம் வெளியாகி கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, டிரைலர் வெளியானதில் இருந்தே பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் குந்தவை – நந்தினி கெட்டப்பில் போட்டோ ஷூட் நடத்தி அதை சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பாரதி கண்ணம்மா பிரபலம் குந்தவை கெட்டபில் போட்டோஷூட் நடத்தி இருக்கிறார்.

பாரதி கண்ணம்மா சீரியல்:

விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வரும் தொடர்களில் ஒன்று பாரதி ண்ணம்மா. இந்த தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த தொடரில் ஹேமா என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலானவர் லிசா குட்டி. இவர் இதற்கு முன் சில சீரியல்களில் நடித்து இருக்கிறார்.

View this post on Instagram

A post shared by Lisha 🦋 (@lisha_hema)

வைரலாகும் புகைப்படம்:

அதோடு பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருக்கிறார். இருந்தாலும், இவர் ஹேமா கதாபாத்திரத்தின் மூலம் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்து இருக்கிறார். தற்போது இவர் குந்தவைப் போல அலங்காரம் செய்து போட்டோ சூட் நடத்தி இருக்கிறார். அது மட்டுமல்லாது பொன்னியின் செல்வன் பாடலுக்கு நடனம் ஆடி வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார். தற்போது அந்த புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்த பலருமே லிசாவின் புகைப்படத்திற்கு லைக்ஸ்குகளையும், கமெண்டுகளையும் குவித்து வருகின்றன.

Tamil Behind Talkies AMP · Quick view
View full