பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை பரீனா, குழந்தை பிறந்த சில மாதங்களில் ஷூட்டிங்கிற்கு வந்ததோடு ஷூட்டிங் ஸ்பாட்டில் குழந்தைக்கு மேக்கப் போட்டுக்கொண்டபடியே குழந்தைக்கு பாலூட்டும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது.சின்னத் தம்பி பெரியதம்பி, ராஜா ராணி, மௌன ராகம், கடைக்குட்டி சிங்கம் என்று சினிமா டைட்டில்களை வைத்து ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் நல்ல வெற்றியை பெற்றது. அந்த வகையில் இதே பாணியில் சினிமா டைட்டிலை வைத்து ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்று வருகிறது.

வெண்பா விலகல் :

இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வருகிறார் நடிகை பரீனா. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் பரீனா கர்ப்பமாக இருப்பதை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்து இருந்தார். கர்ப்பமாக இருந்த போது பல விதமான போட்டோ ஷூட்களை நடத்தி வந்தார் பரீனா.

Advertisement

கர்ப்பகால போட்டோ ஷூட் :

இதனால் இவர் மீது சமூக வலைதளத்தில் பல விதமான நெகட்டிவ் கமன்ட்சுகள் கூட வந்தது. ஆனால், அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் தன்னுடைய கர்ப காலத்தை என்ஜாய் செய்யும் விதமாக பல விதமான போட்டோ ஷூட்களை நடத்தி வந்தார். அதிலும் குறிப்பாக நீருக்கு அடியில் இவர் நடத்திய போட்டோ ஷூட் பெரும் வைரலானது. இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இவருக்கு குழந்தை பிறந்தது.

தனக்கு ஆண் குழந்தை பிறந்து இருப்பதை அதனை ஒரு குட்டி ஷூ புகைப்படம் மூலம் அழகாக தன் இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்து இருந்தார் பரீனா. பரினாவிற்கு குழந்தை பிறந்த செய்தி வெளியான உடன் பல யூடுயூப் சேனல்கள் வீடியோ வெளியிட்டு இருந்தது. அந்த வகையில் ஒரு யூடுயூப் பக்கம் ஒன்றில் பரினாவின் குழந்தை என்று புகைப்படம் ஒன்று வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து பரினாவின் கணவர் ரஹ்மான் இது எங்கள் குழந்தையை இல்லை.

Advertisement

மீண்டும் வந்த வெண்பா :

இது போல போலியான விஷயங்களை பரப்பாதீர்கள் என்று கூறி இருந்தார். குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே பரீனா பாரதி கண்ணம்மா ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். அந்த புகைப்படங்கள் சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார் பரீனா. இந்த நிலையில் பாரதி கண்ணம்மா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பரீனா.

Advertisement

ரசிகர்கள் நெகிழ்ச்சி :

அதில் தன் பச்சிளம் குழந்தைக்கு பாலூட்டியபடியே மேக்கப் போட்டு கொண்டு இருக்கிறார் பரீனா. இந்த விடியோவை பார்த்த பலர் பரீனாவின் டெடிகேஷனை பாராட்டி வருகின்றனர். பரீனா கர்ப்பமாக இருந்த போதே கடைசி மாதங்கள் வரை சீரியலில் நடித்து வந்தார். தற்போது புதிய கண்ணம்மாவுடன் பரீனாவின் காம்பினேஷன் எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பில் இந்த சீரியலின் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.

Advertisement