பல பிரச்சனைகளுக்கு மத்தியில் வெளியான ரயில் படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
இயக்குனர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'ரயில்'. இந்த படத்திற்கு முதலில் 'வடக்கன்' என்று தான் பெயர் வைக்கப்பட்டிருந்தது. சென்சார் போர்ட் இந்தப்படத்தின் தலைப்பிற்கு தடை விதிக்கப்பட்டதால் 'ரயில்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தப் படத்தை வேடியப்பன் தயாரித்திருக்கிறார். தேநீர் ஈஸ்வரி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த படத்தில் குங்குமராஜ் முத்துசாமி, வைரமலா, ரமேஷ் வைத்யா, பர்வைஸ் மஹ்ரூ, ஷமீரா, கோச்சடை செந்தில், வைரம் பட்டி, பின்டூ, வந்தனா, பேபி தனிஷா உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் தேனீ அருகே உள்ள கிராமத்தில் தான் கதை நகர்கிறது. அங்கே ஹீரோ குங்குமராஜ் வேலை, சம்பாத்தியம் இல்லாமல் தினமும் குடித்துவிட்டு எல்லோரிடமும் கடன் வாங்கி வைத்திருக்கிறார். இவருக்கு கல்யாணம் ஆகி 8 வருடங்கள் ஆகி இருக்கிறது. ஆனால், குழந்தை இல்லை. இன்னொரு பக்கம் அந்த கிராமத்தில் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது.
அதில் வடமாநிலத்தை சேர்ந்த நிறைய பேர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அதோடு அந்த ஊரில் உள்ள டீக்கடையில் கூட பானிபூரி விற்பவர்கள் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள். ஹீரோ குங்குமராஜ் இருக்கும் பகுதியை சுற்றி பல பேர் வட மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார். இது அவருக்கு பிடிக்கவே இல்லை. இன்னொரு பக்கம் அவருடைய மனைவி மற்றவர்களிடம் பேசும் போது அவருக்கு அதிகமாக வெறுப்பு, கோபம் வருகிறது.
அந்த வகையில் அவருடைய மனைவி வீட்டின் எதிரே உள்ள வடமாநிலத்தை சேர்ந்த சுனில் என்பவருடன் பேசுகிறார். அது சுத்தமாகவே குங்குமராஜுக்கு பிடிக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவர் கோபத்தில் தன்னுடைய நண்பருடன் சுனிலை கொலை செய்ய திட்டமிடுகிறார். ஆனால், எதிர்பாராத விதமாக சுனில் இறந்து விடுகிறார். அவருடைய இறப்பினால் குங்குமராஜூனுடைய வாழ்க்கையே மாறுகிறது. அதற்கு பின் என்ன நடந்தது? என்பது தான் படத்தின் மீதி கதை.
இந்த படம் சமூக நல்லிணக்கத்தை பற்றி பேசும் படமாக இயக்குனர் கொடுத்திருக்கிறார். படம் முழுக்க கிராமத்து வாழ்வியலை அழகாக இயக்குனர் காண்பித்திருக்கிறார். படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரம் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். முத்தையாவின் மனைவியாக செல்லமா என்ற கதாபாத்திரத்தில் வரும் வைரமலா படத்தை தாங்கி சென்றிருக்கிறார் என்றே சொல்லலாம்.
தமிழ்நாட்டில் இருக்கும் சிலருக்கு வடமாநிலத்தை சேர்ந்தவர்களை பார்த்தாலே பிடிக்காது. அப்படி அவர்களை சுற்றி இருக்கும் போது என்ன நிகழ்வது என்பதை தான் இயக்குனர் காண்பித்திருக்கிறார். வட மாநிலத்தில் இருந்து வந்து தமிழ்நாட்டில் வேலை செய்தால் அவர்கள் என்னவெல்லாம் பிரச்சனைகள் எதிர்கொள்கிறார்கள் என்பதையும் இயக்குனர் காண்பித்திருக்கிறார். பின்னணி இசை படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. கதைக்களம் நன்றாக இருந்தாலும் அதை இயக்குனர் கொண்டு சென்ற விதத்தில் நிறைய கவனம் செலுத்தி இருக்கலாம். மொத்தத்தில் ஒரு சுமாரான படமாகத்தான் இருக்கிறது.
நிறை:
நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்
பின்னணி இசை ஓகே
கதைக்களம் ஓகே
குறை:
சமூக நல்லிணக்கம் பேசும் படம்.
கதைக்களம் கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் சுவாரஸ்யத்தை கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும்
முதல் பாதிப்பு பொறுமையாக செல்கிறது
இரண்டாம் பாதியில் விறுவிறுப்பை காட்டி இருந்தால் நன்றாக இருக்கும்
பாடல்கள் பெரிதாக ஒர்க்அவுட் ஆகவில்லை
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
மொத்தத்தில் ரயில் - மெதுவாக செல்கிறது