தனது Ex காதலி குறித்து உருக்கமாக பேசிய ஜெய் ஆகாஷ் - விஜய் மனைவி பெயரை இழுக்கும் நெட்டிசன்கள்.

By subhashini · 9/1/2024

பிரபல நடிகர் ஜெய் ஆகாஷை மேடையிலேயே பயில்வான் ரங்கநாதன் அசிங்கப்படுத்தி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் ஜெய் ஆகாஷ். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியுடன் இவர் சின்னத்திரை சீரியல் பக்கம் வந்துவிட்டார்.

அந்த வகையில் இவர் முதன்முதலில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வெற்றி அடைந்த நீதானே என் பொன்வசந்தம் என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார். இது மராட்டிய மொழியில் புகழ் பெற்ற சீரியல் துலா பஹட் ரே என்ற சீரியலின் ரீமேக். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த 20 வயதான இளம் பெண் அனுவுக்கும், 40 வயதை கடந்த பணக்கார குடும்பத்தை சேர்ந்த சூரிய பிரகாஷ்க்கும் இடையே நடக்கும் காதல் தான்.

ஜெய் விஜயம் படம்:

இந்த சீரியலும் நன்றாக தான் சென்றிருந்தது. அதற்குப்பின் இவர் தெலுங்கு சீரியலிலும் நடித்திருந்தார். இனி இவர் மீண்டும் சினிமாவில் நடிக்கலாம் என்று முயற்சித்து வந்தார். அந்த வகையில் தற்போது ஜெய் ஆகாஷ் நடித்திருக்கும் படம் ஜெய் விஜயம். இந்த படத்தை இயக்குனர் ஜெயஷதீசன் நாகேஸ்வரன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தில் அகஷய கண்டமுதன், அட்சய ராய், மைக்கேல் ஆகஸ்டின் என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

https://twitter.com/suseemaha16/status/1744376601993744744?s=48

படம் குறித்த தகவல்:

இந்த படத்தை ஜெய் ஆகாஷ் தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு சதீஷ்குமார் இசையமைத்திருக்கிறார். அதிரடி- திரில்லர் பாணியில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படம் இன்னும் சில மாதங்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்திற்கான ப்ரமோஷன் பணிகளில் பட குழு ஈடுபட்டு இருக்கிறது.

பயில்வான் ரங்கநாதன் கிண்டல்:

இந்த விழாவில் பேசிய ஜெய் ஆகாஷ் 'நான் ஒரு பெண்ணை காதலித்தது உண்மைதான். அந்த பெண் பணத்திற்காக வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். நான் அதை வைத்து தான் படம் எடுத்திருக்கிறேன். ஆனால், என்னுடைய காதலி நல்லவள் என்பதால் இந்த கதையில் நான் பாசிட்டிவாக கொடுத்து இருக்கிறேன். என்னுடைய காதலும் உண்மை, நான் காதலித்த பெண்ணும் உண்மை என்று கூறியிருக்கிறார். ஜெய் ஆகாஷ் இப்படி பேசி இருக்கும் அந்த பெண் விஜய் மனைவி சங்கீதா என்று பலரும் கூறி வருகின்றனர்.

ஜெய் ஆகாஷ் காதல் கதை:

ஏற்கனவே ப்ரோமோஷன் விழாவில் கலந்துகொண்ட பயில்வான் ரங்கநாதன், ஜெய் ஆகாஷ் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது அவரைப் பற்றி ஒரு கிசுகிசு வெளியிட்டேன். இவரும் இன்னொரு பெண்ணும் லண்டனில் இருந்து வந்திருந்தார்கள். இருவருமே காதலித்தார்கள். அந்த பெண் பிரபல நடிகை தான். நான் சொன்ன கிசுகிசு உண்மைதான் என்று சொல்கிறார். மேடையே கலகலவென்று சிரிக்கிறது. பின் ஜெய் ஆகாஷ் உடனடியாகவே பயில்வான் பக்கம் வந்து இது பொய்யான தகவல் என்றுகூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full