25 டேக், மலையாள நடிகை பின்பக்கம் சிவக்க சிவக்க அடித்த நாயகன்- பயில்வான் சொன்ன ஷாக்கிங் சம்பவம்
ஹேமா கமிட்டி விவகாரம் தொடர்பாக மலையாள நடிகை குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கும் விஷயம் தான் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாகவே சினிமாவில் பெண்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் என்ற பெயரில் பாலியல் தொல்லை கொடுப்பது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் மலையாள சினிமாவிலும் இந்த மாதிரி நிறைய நிகழ்வுகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு சினிமா துறையில் இருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான பிரச்சினைகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று கேரள மாநில அரசு அமைத்திருந்தது. பின் இது தொடர்பாக விசாரணையும் நடத்தி இருந்தார்கள். அதனை அடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு முதலமைச்சர் பினராய் விஜயன் இடம் 233 பக்க அறிக்கை ஆவணங்கள், ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரத்துடன் சமர்ப்பித்து இருந்தார்கள். ஆனால், இதை பல காரணங்களால் வெளியிடாமல் இருந்தது.
ஹேமா கமிட்டி அறிக்கை:
மேலும், கடந்த மாதம் 19 ஆம் தேதி ஹேமா கமிட்டி அறிக்கையை அரசு வெளியிட்டது. இது மலையாள திரை உலகில் மிகப்பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. அதில், நிறைய பெண்கள் அட்ஜஸ்ட்மெண்ட் என்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்திருக்கிறது. இது குறித்து கேரள சினிமாவில் பெரிய விவாதமே நடந்து கொண்டிருக்கிறது. மேலும், இது தொடர்பாக பிரபலங்கள் பலருமே தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
பயில்வான் ரங்கநாதன் பேட்டி:
பின் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகரும், அம்மா அமைப்பின் முன்னாள் தலைவருமான மோகன்லால் விளக்கம் கொடுத்தார். இப்படி கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பயில்வான் ரங்கநாதன் மலையாள கவர்ச்சி நடிகை ஸ்வேதா மேனன் குறித்து அதிர்ச்சிகரமான விஷயம் ஒன்று கூறியிருக்கிறார்.
ஸ்வேதா மேனன் பற்றி சொன்னது:
அதில் அவர், நடிகை ஸ்வேதா மேனன் ரதி நிர்வேதம் என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தினுடைய கிளைமாக்ஸில் ஹீரோ, நடிகை ஸ்வேதா மேனன் உடைய பின் பக்கம் அடிக்கும் மாதிரி காட்சி எடுக்கப்பட்டது. அப்போது அந்த காட்சியில் அவர் சரியாக நடிக்காததால் 25 முறை டேக் வாங்கினார்கள். இதனாலே அவருடைய பின்பக்கம் அடித்து அடித்து அந்த இடமே சிவந்து விட்டது. இதற்காக நடிகை மருத்துவமனைக்கும் சென்றிருந்தார். இதை நடிகை ஸ்வேதா மேனன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அந்த பேட்டி கூட சிவக்க சிவக்க அடித்த நாயகன் என்ற பெயரில் வெளியாகி மிகப்பெரிய அளவில் லைக்ஸ்களை குவித்து இருந்தது என்று கூறியிருக்கிறார்.
ஸ்வேதா மேனன் குறித்த தகவல்:
மலையாளத்தில் ஸ்வேதா மேனன் நடித்த ரதி நிர்வேதம் படம் நல்ல வரவேற்பை பெற்று இளைனர்கள் மத்தியில் படு ஃபேமஸ் என்றே சொல்லலாம். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான கவர்ச்சி நடிகையாக இருந்தவர். இவர் மலையாள மொழியில் மட்டும் தமிழ், தெலுங்கு போன்ற பிற மொழி படங்களில் நடித்து இருந்தார். ஆனால், இவருக்கு தமிழில் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. இவர் ஹிந்தியில் மட்டும் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருந்தார்.