விந்தியாவின் கணவர் யார் தெரியுமா? மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்

By subhashini · 10/4/2024

நடிகை விந்தியா குறித்து பயில்வான் ரங்கநாதன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் உடன் இணைந்து படத்தில் நடித்து இருக்கிறார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தவுடன் தனியாக யூட்யூப் சேனல் உருவாக்கி அதில் சினிமா பிரபலங்கள் பலரை பற்றி அவதூறாக பேசி வருகிறார்.

அதோடு இவர் நீண்ட காலமாகவே பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார். அதனால் சினிமா துறையில் நடக்கும் பல அந்தரங்க விஷயங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறார். மேலும், இவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து தமிழ் சினிமாவில் இருந்து வருவதால் சினிமா நட்சத்திரங்களைப் பற்றி அறியாத பல ரகசியங்களை தன்னுடைய பத்திரிக்கையின் மூலம் வெளியிட்டு வருகிறார். அதோடு இவர் சினிமா துறையில் உள்ள நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் அவர்களைப் பற்றி அவதூறாக பேசி வீடியோக்களை வெளியிட்டு பற்றி வாடிக்கையாக வைத்து உள்ளார்.

பயில்வான் ரங்கநாதன் குறித்த தகவல்:

அதனால் இவருக்கும் சினிமா துறையை சேர்ந்த பிரபலங்களுக்கும் இடையயே வாக்குவாதம் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. இருந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வரும் எதிர்ப்புகளுக்கும் பதிலடி கொடுத்து தன்னுடைய வேலையை தொடர்ந்து செய்து வருகிறார் பயில்வான். இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் சினிமா பிரபலங்களை பற்றி பேச ஆரம்பித்த பின் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். அதிலும் சமீப காலமாக இவர் நடிகைகள் குறித்து ஆபாசமாக பேசி வருகிறார்.

பயில்வான் ரங்கநாதன் பேட்டி:

இதை சில பேர் கண்டு கொள்ளவில்லை என்றாலும் சில பேர் நேரடியாகவே சண்டை போட்டு இருக்கிறார்கள். இருந்தும் பயில்வான் தன் வேலையை செய்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை விந்தியா குறித்து பயில்வான் ரங்கநாதன், நடிகைகள் பல பேர் அரசியல் வருவது வழக்கம். பின் அவர்கள் ஒவ்வொரு கட்சியாக மாறிவிடுவார்கள். அப்படித்தான் நடிகை விந்தியாவும் அரசியல்வாதி போல் பேசாமல் ஏதேதோ உளறி வருகிறார்.

விந்தியா குறித்து சொன்னது:

பிரபல நடிகை பானுப்பிரியாவின் அண்ணன் கோபாலகிருஷ்ணன் என்பவரை தான் விந்தியா திருமணம் செய்திருந்தார். ஆனால், சில வருடங்களிலேயே இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டார்கள். அதற்குப் பிறகு விந்தியா அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் பாராளுமன்ற தேர்தலுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக இவருக்கு 25 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த பணத்திற்காகவே விந்தியா இப்படியெல்லாம் பேசி வருகிறார் என்று கூறி இருக்கிறார்.

விந்தியா குறித்த தகவல்:

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் அறிமுகமான நடிகை விந்தியா. இவர் தமிழில் ரகுமான் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான ‘சங்கமம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது. தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார் விந்தியா. பின் பட வாய்ப்புகள் குறையவே இவர் கடந்த 2008ஆம் ஆண்டு பானுப்பிரியாவின் சகோதரரான கோபாலகிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டார். இவர் 2006 ஆம் ஆண்டில் அதிமுக கட்சியில் இணைந்து விட்டார். இவர் கட்சியின் நட்சத்திர பேச்சாளராக இருக்கிறார். இவர் சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களின் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் மும்முரமாக அதிமுகவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full