ஆர்த்தி பற்றி என் மகன்களுக்கு தெரியாது, மாமியார் இப்படிப்பட்டவர்- வேதனையில் ஜெயம் ரவி சொன்னதாக பயில்வான் ரங்கநாதன் பேட்டி

By subhashini · 26/9/2024

விவாகரத்து குறித்து ஜெயம் ரவி சொன்னதாக பயில்வான் ரங்கநாதன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களாக ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து குறித்த செய்தி தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பின் நடிகர் ஜெயம் ரவி சில வாரங்களுக்கு முன் தான் விவாகரத்து குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். இதை அடுத்து இது தொடர்பாக ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையில், எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும் மன வேதனையும் அடைந்தேன்.

இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தை சார்ந்து அவராகவே எடுத்த முடிவே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்று கூறி இருந்தார். இதை அடுத்து ஜெயம் ரவி -ஆர்த்தி பிரிந்ததற்கு காரணம் பாடகி கெனிஷா தான் என்றும், ஜெயம் ரவி மற்றும் கெனிஷாவிற்கு இருக்கும் பழக்கத்தால் தான் பிரிந்தார்கள் என்றெல்லாம் பல செய்திகள் வருகின்றது.

பயில்வான் ரங்கநாதன் பேட்டி:

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் பயில்வான் ரங்கநாதன், பல விஷயங்களை வெளிப்படையாக ஜெயம் ரவி சொல்ல மறுக்கிறார். பல சம்பவங்கள் அவருக்கு நடந்து இருக்கிறது. அதனால் அவர் எதையும் விளக்கமாக சொல்லவும் இல்லை. காரணம், தன்னுடைய மகன்களுக்கு எந்த விஷயமும் தெரிந்து விடக்கூடாது என்றும், அவர்களுடைய வாழ்க்கை தான் முக்கியம் என்பதாலே இவர் தன்னுடைய மனைவி ஆர்த்தியை பற்றி எதுவும் பேச விரும்பவில்லை. அதோடு விவாகரத்து பெற்று பிரிந்தாலுமே தன்னுடைய குழந்தைகளுக்கு அவர் தான் அம்மா.

மகன்கள் குறித்து ஜெயம் ரவி சொன்னது:

தன்னுடைய அம்மா பெயரில் குற்றம் சொன்னால் பிள்ளைகளுடைய மனது நோகும் என்ற விதத்திலும் அவர் கூறியிருக்கிறார். ஏற்கனவே தனுசுடன் ஆர்த்தி நெருக்கமாக பேசிய போது ஜெயம் ரவி- தனுசு இடையே சண்டை வந்தது. அதற்குப்பின் ஜெயம் ரவி- ஆர்த்தி இருவருமே சமாதானம் ஆகிவிட்டார்கள். இந்த பிரச்சினை வெளியே வந்தும் பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். அதனை அடுத்து ஜெயம் ரவி இடம் எதுவுமே சொல்லாமல் பப்புக்கு போவது, மது குடிப்பது, பாங்காங், தாய்லாந்து போன்ற வெளிநாடுகளுக்கு போவது என்று ஆர்த்தி வழக்கமாக வைத்திருந்தார்.

https://www.youtube.com/watch?v=18-3oEidxfM

ஆர்த்தி செய்த வேலை:

ஆர்த்தி அனுமதி வாங்கவில்லை என்றாலும் கணவரிடம் ஒரு வார்த்தையாவது சொல்ல வேண்டும். ஆனால், ஆர்த்தி அதை எதையுமே செய்யவில்லை. அதேபோல் ஜெயம் ரவி சம்பாதித்த மொத்த சொத்துமே ஆர்த்தி இடம் தான் இருக்கிறது. பிரதர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது கூட ஜெயம் ரவி வாடகை காரில் தான் வந்தார். ரவிக்கு சொந்தமாக அடையாறில் ஒரு பிளாட் இருக்கிறது. அங்கிருந்து தான் ஜெயம் ரவி எனக்கு பேட்டியை கொடுத்தார். அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை கூட ஆர்த்தி முடக்கிவிட்டார். செக் புக், கார் போன்ற அனைத்து உடைமைகளுமே ஆர்த்தி இடம் தான் இருக்கிறது.

விவாகரத்து குறித்து சொன்னது:

இதைப்பற்றி ஜெயம் ரவி தன்னுடைய தந்தையிடம் சொன்னதற்கு, உன்னுடைய விருப்பம் என்று சொல்லிவிட்டார். அதற்குப் பின் இரண்டு முறை விவாகரத்து நோட்டீஸ் ஜெயம் ரவி அனுப்பிருந்தார். முதல் முறை அனுப்பும் போது மாமியார் சுஜாதா, ஜெயம் ரவி தந்தையிடம் பேச வந்திருந்தார். அப்போது ஜெயம் ரவி தரப்பில் கேட்ட கேள்விகள் எல்லாம் அவரால் பதில் சொல்ல முடியாமல் அங்கிருந்து சென்று விட்டார். அதற்குப் பிறகு அளித்த நோட்டீஸ்க்கு ஆர்த்தி தரப்பில் எந்த பதிலுமே வரவில்லை. ஆனால், தனக்கு விவாகரத்து விஷயம் தெரியாது என்று ஆர்த்தி சொல்வது முழுக்க முழுக்க சொல்வதெல்லாம் பொய். ஜெயம் ரவி தரப்பிலிருந்து ஆர்த்தியை பற்றி ஒரு வார்த்தை கூட தவறாக பேசவில்லை. என்னிடம் பேசும்போது கூட அவர் நல்லவர் என்பது போலவும் மாமியார் தான் ரொம்ப கொடுமைக்காரர் என்றும் கூறியிருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full