போதை கடத்தல் தொழிலதிபருடன் தொடர்பு - கணவரை பிரியப்போகிறாரா நமீதா? பயில்வான் கிளப்பிய சர்ச்சை.

By subhashini · 20/1/2024

நமீதா தன்னுடைய கணவரை விவாகரத்து செய்வதற்கு இவர்தான் காரணம் என்று பயில்வான் ரங்கநாதன் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் நமீதா. சொல்லப்போனால், ஒரு காலத்தில் இவர் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர். தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் தான் நமீதா அறிமுகமானார். ஆனால், அதற்கு முன் இவர் சில தெலுங்கு படங்களில் நடித்து இருக்கிறார்.

அதை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் சினிமாவில் அறிமுகமான சில படத்திலேயே இளைஞர்களின் மனதில் தனக்கென ஓரு இடத்தை பிடித்து விட்டார். அதன் பின் இவர் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தார். அதோடு இவர் அனைவரையும் ‘மச்சான்’ என்று தான் செல்லமாக அழைப்பார். அதனால் தான் இவர் இளைஞர்கள் மத்தியில் பெரிய அளவுக்கு பிரபலம் ஆனார் என்றும் சொல்லலாம்.

நமீதா திருமணம்:

மேலும், இவர் தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து இருக்கிறார். உடல் எடை கொஞ்சம் அதிகரித்த பிறகு நமீதாவிற்கு சினிமா பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார். அதன் பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார்.

நமீதா குடும்பம்:

இதன் மூலமாவது பட வாய்ப்புகள் கிடைக்குமா? என்று காத்திருந்தார் நமீதா. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் இவருக்கு பெரிதாக சினிமா பட வாய்ப்புகள் அமையவில்லை. பின் இவர் 2017 ஆம் ஆண்டு தனது காதலர் வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஆண்டு தான் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. இதற்கிடையே சொந்தமாக ஓடிடி தளத்தை நமீதா உருவாக்கி இருக்கிறாராம்.

மீண்டும் என்ட்ரி கொடுக்கும் நமீதா:

அந்த ஓடிடி தளத்தில் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படங்கள் மட்டுமே வெளியிடப்படுகிறதாம். தற்போது நமீதா அவர்கள் “பவ் பவ்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நமீதாவே தயாரித்து இயங்குவதாகவும், இப்படம் முழுக்க செல்லப்பிராணிகளை விரும்பும் நண்பர்களுக்கான படம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நமீதா குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கும் தகவல்தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பயில்வான் ரங்கநாதன் வீடியோ:

அதில், ஒரு போதை கடத்தல் தொழிலதிபருக்கும் நமிதாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் நமீதா தன்னுடைய காதல் கணவரை பிரியும் எண்ணத்தில் இருக்கிறார். அந்தத் தொழிலதிபரின் வசதியான வாழ்க்கைக்கு மயங்கி தான் நமீதா இப்படி மாறி இருக்கிறார் என்றெல்லாம் பேசியிருக்கிறார். இந்த சம்பவம் தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் ஹாட் டாபிக் ஆகவே பேசப்பட்டு வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலருமே நமீதாவை பற்றி தவறாக பேசாதீர்கள், உங்களுக்கு தோன்றுவதை எல்லாம் பேசுவீர்களா? என்றெல்லாம் விமர்சித்தும் வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full