இரண்டாம் திருமணம் செய்ய தான் ஜெயம் ரவி மும்பை போனாரா?- பயில்வான் ரங்கநாதன் சொன்ன விஷயம்
நடிகர் ஜெயம் ரவி குறித்து பயில்வான் ரங்கநாதன் அளித்திருக்கும் பேட்டி தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய விவாகரத்தை சோசியல் மீடியாவில் அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் பேரிடியாக விழுந்தது. இதை அடுத்து இது தொடர்பாக ஆர்த்தி விவாகரத்து குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார். அதோடு ஜெயம் ரவி -ஆர்த்தி பிரிந்ததற்கு காரணம் பாடகி கெனிஷா தான் என்றும், இருவருக்கும் இடையே பழக்கம் இருப்பதால்தான் இவர்கள் பிரிந்தார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தது.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜெயம் ரவி செய்தியாளர்கள் சந்திப்பில், ஒரு பாடகியுடன் என்னை தொடர்பு படுத்தி பேசுகிறார்கள். அப்படியெல்லாம் பேசாதீங்க என்று கூறியிருந்தார். தற்போது ஜெயம் ரவி இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் 'பிரதர்' என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு இப்படம் வெளியாக இருக்கிறது. அதனால், பிரதர் படத்தின் பிரமோஷன் பணிகளில் ஜெயம் ரவி ஈடுபட்டு வருகிறார். இதற்கு இடையே ஜெயம் ரவி, மும்பையில் செட்டில் ஆன நிலையில் பல வதந்திகள் வந்தது.
பயில்வான் ரங்கநாதன்:
இந்நிலையில், தற்போது பயில்வான் ரங்கநாதன், ஜெயம் ரவி மும்பைக்கு சென்ற காரணம் குறித்து பேசி உள்ளார். அதில், ஒருவர் வீட்டு மாப்பிள்ளை ஆகப் போனால் அது ரொம்ப கஷ்டம். வீட்டில் எல்லா கண்ட்ரோல்களும் மாமியாரிடம் தான் இருக்கும். இதனால், ஜெயம் ரவி அனைத்திற்கும் அவரது மாமியாரிடம் தான் அனுமதி கேட்க வேண்டியது இருந்தது. அதுவே அவருக்கு மனவேதனை அளித்தது. அதோடு காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி ஆர்த்தி அவரை சந்தேகப்பட்டு பார்க்கிறார்.
நீதிமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும்:
ஜெயம் ரவியை நம்பாமல் அவருடைய உதவியாளரிடம் தகவல்களை பெறுவது அவருக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிந்து சமாதான செய்ய முயற்சித்து இருக்கிறார்கள். மேலும், தன் மகள் மீதுதான் தவறு உள்ளது என்பதை புரிந்து கொண்ட ஆர்த்தியின் தந்தை இந்த சம்பவம் குறித்து எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை. தற்போது இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி விவாகரத்து குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். விவாகரத்துக்கான காரணம் என்ன என்பது நீதிமன்றத்தில் தான் தெரியும். அது அவர்கள் இரண்டு பேரின் தனிப்பட்ட விவகாரம் வெளியில் யாருக்கும் தெரியப்போவதில்லை.
மும்பையில் செட்டில் ஆன ரவி:
அதை தொடர்ந்து பேசிய பயில்வான், சென்னையிலே தொடர்ந்து இருந்தால் அவரது மனதை மேலும் இருக்கமாக்கும் என எண்ணி அவர் மும்பை சென்றிருக்கலாம். அதுமட்டுமில்லாமல், அவர் தமிழ் படங்கள் செய்து கொண்டு இருந்தபோது அவருக்கு ஹிந்திலும் வாய்ப்புகள் வந்தது. ஆனால், அதை ஜெயம் ரவி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தற்போது வரும் வாய்ப்பை நழுவ விட வேண்டாம் என முடிவெடுத்து மும்பையில் செட்டில் ஆகி உள்ளார். அது மட்டும் இல்லாமல் தற்போது ஜெயம் ரவி பிரதர் பட ப்ரமோஷன் வேலைகளில் இறங்கியுள்ளார்.
https://www.youtube.com/watch?v=zcWnpxnsRvs
இரண்டாவது திருமணம் குறித்து:
மேலும், பாடகி கெனிஷாவுடன் தனக்கு இருப்பது நல்ல நட்பு மட்டுமே என்று அவர் கூறியுள்ளார். அவர் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தபோது தனக்கு உதவி செய்தவர் கெனிஷா என்று கூறியுள்ளார். அதோடு ஜெயம் ரவி இரண்டாவது திருமணம் செய்ய மும்பை சென்றுள்ளதாக பலர் கூறுகின்றனர். ஆனால், தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் ஜெயம் ரவி அதை தான் பார்ப்பார். ஒருவேளை ஆர்த்தி அவர்கள் தாயைப் பிரிந்து தனியாக வந்து குடும்பம் நடத்தினால் ஜெயம் ரவி ஒன்றாக வாழ சம்மதிக்கவும் செய்யலாம். எனவே இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம் என்று பேசி உள்ளார்.