லவ் டுடேவுக்கும், டிராகனுக்கும் இது தான் வித்தியாசம் - பயில்வான் ரங்கநாதன் விமர்சனம்
தமிழ் சினிமாவில் வெளிவந்த லவ் டுடே என்ற படத்தின் மூலம் ஹீரோவாக மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் பிரதீப் ரங்கநாதன். தற்போது இவர் மீண்டும் ஹீரோவாக நடித்திருக்கும் படம் தான் டிராகன். இந்த படத்தை இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின், கௌதம் மேனன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
படத்தில் படத்தில் ஹீரோ பிரதீப் ரங்கநாதன், 12ஆம் வகுப்பில் நன்றாக படித்து 96 சதவீதம் மதிப்பெண் எடுத்து மெரீட்டில் கல்லூரிக்கு செல்கிறார். ஆனால், இவர் பள்ளியில் நன்றாக படித்தும், நல்ல பையனாக இருந்துமே ஒரு பெண் இவரை வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இதனால் கல்லூரியில் இவர் அடாவடி செய்யும் ரகளை பையனாக வலம் வருகிறார். 48 அரியர் வைத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் கதாநாயகி அனுபமாவை காதலிக்கிறார்.
ட்ராகன் படம்:
இன்னொரு பக்கம் கல்லூரி ப்ரொபசர் மிஸ்கினை எதிர்த்து இவர் நிறைய சேட்டைகள் எல்லாம் செய்கிறார். மேலும், இவருடன் படித்தவர்கள் எல்லோருமே வேலைக்கு போகிறார்கள். ஆனால், இவர் மட்டும்தான் பிக் பாஸ் பார்த்து வாழ்க்கை கழித்துக் கொண்டிருக்கிறார். இதனால் அனுபமா இவருடைய காதலை பிரேக் அப் செய்து விடுகிறார். இதனால் பொங்கி எழுந்த பிரதீப், அனுபமா முன்னாடி நன்றாக வாழ வேண்டும் என்று போலி சர்டிபிகேட் தயார் செய்கிறார். இதன் மூலம் இவர் மூன்று லட்சம் சம்பளத்திற்கு வேலைக்கு செல்கிறார்.
படத்தின் கதை:
வாழ்க்கையில் எல்லாம் செட்டில் ஆகிறார். அப்போது ஒரு நாள் மிஸ்கின், பிரதீப் போலீஸ் சான்றிதழ் மூலம் தான் வேலைக்கு போனார் என்ற விஷயம் தெரியவந்தது. அதைப் பற்றி மிஸ்கின், பிரதீப்பிடம் கேட்கிறார். உடனே அவர், மிஸ்கின் காலில் விழுந்து எல்லாம் கெஞ்சுகிறார். உடனே மிஸ்கின், நீ 48 அரியரையும் கிளியர் செய். உன்னுடைய தப்பை மன்னித்து விடுகிறேன் என்று சொல்கிறார். அதற்குப்பின் பிரதீப் என்ன செய்தார்? தன்னுடைய அரியரை எல்லாம் கிளியர் செய்தாரா? தன்னுடைய காதலில் ஜெயித்தாரா? என்பது தான் படத்தின் உடைய மீதி கதை. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
பயில்வான் ரங்கநாதன் பேட்டி:
இப்படி இருக்கும் நிலையில் டிராகன் படம் குறித்து அளித்த பேட்டியில் மூத்த பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன், எப்போதும் போல கடைசி பென்ஜில் உட்கார்ந்து கொண்டு படிப்பில் ஜீரோவாக இருந்து விஜே சித்து உடன் பிரதீப் ரங்கநாதன் அலப்பரை செய்திருக்கிறார். எல்லோருமே இவன் தேரமாட்டான் என்று அசிங்கப்படுத்தும் போது வெறிகொண்டு அரியரை கிளியர் பண்ணனும் என்று நினைக்கிறார். இது வழக்கமான கதை தான். இதில் அஸ்வந்த் மாரிமுத்து தன்னுடைய கல்லூரி காலத்தை சொல்லி இருக்கிறார். லவ் டுடேக்கும் டிராகனுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. லவ் டுடே படத்தில் வெறும் காதல் மட்டும் தான். டிராகன் படத்தில் லவ், கல்லூரி வாழ்க்கை. இதில் கல்லூரி வாழ்க்கை தான் நிறைய இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=HFLC5tpPGJY
படம் குறித்து சொன்னது:
ஆரம்பத்தில் பாதி நடிப்பு தனுஷ் மாதிரி இருந்தாலும் கொஞ்ச நேரத்திலேயே எஸ்.ஜே சூர்யா மாதிரி மாறிவிட்டார் பிரதீப். அஸ்வந்த் மாரிமுத்து கொஞ்சம் புத்தி கூர்மையோடு தான் இந்த படத்தில் செயல்பட்டு இருக்கிறார். எல்லா நடிகர்களையும் சரியாக இயக்குனர் பயன்படுத்தியிருக்கிறார். பாட்டு எல்லாம் கசக்கி பிழியுற அளவுக்கு இல்லை என்றாலும் பின்னணி இசை நன்றாக இருக்கிறது. தன்னுடைய கல்லூரியில் நடந்ததுதான் அஸ்வத் மாரிமுத்து படமாக எடுத்திருக்கிறார்.
அதனால் இந்த படம் ரசிகர் மத்தியில் எளிய முறையில் சென்று அடையும். கடைசி 15 நிமிடத்தில் இயக்குனர் தூக்கி நிறுத்திவிட்டார் என்று சொல்லலாம். இந்த படத்தை கண்டிப்பாக ஒரு முறை சென்று பார்க்கலாம். இன்றைய இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையில் படத்தை கொடுத்திருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.