தன் மகனின் திருமணத்திற்காக நெப்போலியன் செய்யும் விஷயம்- ரகசியத்தை போட்டு உடைத்த பயில்வான் ரங்கநாதன்
நெப்போலியன் மகன் திருமணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான நடிகராக இருந்தவர் நெப்போலியன். இவர் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இந்த தம்பதிக்கு தனுஷ், குணால் என்கிற இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது நெப்போலியன் அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அங்கே இவர் ஹைடெக் விவசாயி ஆகவும், பெரிய தொழில் அதிபராகவும் இருக்கிறார். இப்படி இவர் இருப்பதற்கு காரணமே அவருடைய மகன் தனுஷ் தான்.
தனுசிற்கு நான்கு வயது இருக்கும்போதே தசைச் சிதைவு என்ற நோய் ஏற்பட்டது. இதற்காக நெப்போலியன் பல மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டு இருந்தார். இருந்தும் பயனில்லாமல் போனது. கடைசியில் திருநெல்வேலி அருகே பாரம்பரிய முறைப்படி இந்த நோய்யை குணப்படுத்தி இருந்தார். ஆனால், முழுவதுமாக குணம் ஆகவில்லை. அதுமட்டுமில்லாமல் தன்னுடைய மகனுக்கு ஏற்பட்ட நிலைமை யாருக்கும் நிகழக்கூடாது என்பதை மனதில் வைத்துக்கொண்டு நெப்போலியன் திருநெல்வேலியில் மிகப்பெரிய மருத்துவமனை ஒன்றை கட்டியிருக்கிறார்.
தனுஷ் குறித்த தகவல்:
பின் தனுஷ் உயர் சிகிச்சைக்காக நெப்போலியன் தன்னுடைய சொந்த நாட்டை விட்டு அமெரிக்காவிற்கு சென்றார். அங்கேயே தன் மகனுக்காக தங்கிவிட்டார். தனுஷும் தன்னிடம் இருக்கும் குறையை மறந்து பல துறைகளில் சாதித்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் நெப்போலியன் நடத்தி வரும் பல நிறுவனங்களை தனுஷ் தான் கவனித்து வருகிறார். இதனால் தனுசுக்காகவே ஒரு தனி நிறுவனத்தை நெப்போலியன் உருவாக்கி இருக்கிறார். தற்போது தனுசுக்கு 25 வயது ஆனதால் நெப்போலியன் திருமண ஏற்பாடு செய்திருக்கிறார்.
நெப்போலியன் மகன் திருமணம்:
சமீபத்தில் நெப்போலியன் மகன் தனுஷிற்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இதனால் இந்த நிச்சயதார்த்த பத்திரிகையை நெப்போலியன் அவர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கொடுத்திருந்தார். இது குறித்து தனுஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும், தனுஷின் உடல்நிலை பிரச்சனை காரணமாக அவரால் விமானத்தில் பயணிக்க முடியாது. நெப்போலியனின் வருங்கால மருமகள் பெயர் அக்ஷயா. இவருடைய சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம்.
நெப்போலியன் வீட்டு விசேஷம்:
அங்கு மூலக்கரை பட்டியை சார்ந்த விவேகானந்தர் என்பவரின் மகள் தான் அக்ஷயா. இவரைத்தான் நெப்போலியன் மகன் தனுஷ் திருமணம் செய்ய இருக்கிறார். அதோடு தனுஷால் இந்தியாவிற்கு வர முடியாததால் வீடியோ காலின் மூலம் நிச்சயதார்த்தம் நடந்து இருக்கிறது. இது தொடர்பான வீடியோ தான் கடந்த இரண்டு நாட்களாகவே இணையத்தில் அதிகமாக வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், தற்போது நெப்போலியன் தன்னுடைய மகனின் திருமண வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். மணப்பெண் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்.
https://www.youtube.com/watch?v=aVZPfqnKeqI
பயில்வான் ரங்கநாதன் வீடியோ:
இதனால் திருநெல்வேலியின் வழக்கப்படி மணமகள் வீட்டில் தான் திருமணமே செய்ய வேண்டும். ஆனால், மணமகன் தனுஷ் அமெரிக்காவில் இருக்கிறார். அவரால் விமானத்தில் வர முடியாது. இதனால் தான் நெப்போலியன் தன்னுடைய குடும்பத்தோடு கப்பலில் வருவதற்கு சொகுசு கப்பலை புக் பண்ணியிருக்கிறார். இருந்தாலுமே, திருமணம் தேதி இன்னும் முடிவு செய்யவில்லை. அதுமட்டுமில்லாமல் மணமகளை அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்று அங்கேயே திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கின்றது என்று கூறி இருக்கிறார்.