அவ ஒரு ஆள் மயக்கி, இதனால தான் ப்ரியங்கா வாழ்க்கை போனது- பயில்வான் ரங்கநாதன் சொன்ன விஷயம்
பிரியங்கா குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசி இருக்கும் கருத்து தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே மணிமேகலை- சுசித்ரா விவகாரம் தான் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த முறை நிகழ்ச்சியில் தாமுவுடன் மற்றொரு நடுவராக மாதம்ப்பட்டி ரங்கராஜ் களம் இறங்கி இருக்கிறார். இந்த நிகழ்ச்சியை ரக்ஷன் மற்றும் மணிமேகலை தொகுத்து வழங்கி வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியிலிருந்து திடீரென மணிமேகலை விலகியதாக போட்ட பதிவு ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக மணிமேகலை போட்ட பதிவில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இனி நான் இல்லை. நான் ரொம்ப நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும், எப்போதும் என்னுடைய 100% முயற்சியையும், கடின உழைப்பையும் கொடுத்தேன். 2019 இல் இருந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருக்கிறேன். ஆனால், சுயமரியாதையை விட முக்கியமானது எதுவுமே கிடையாது. என்னுடைய வாழ்க்கையின் எல்லா நேரத்திலும் நான் அதை கண்டிப்பாக பின்பற்றி வருகிறேன். புகழ், பணம், தொழில் வாய்ப்புகள் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. சுயமரியாதை என்று வரும்போது எல்லாமே இரண்டாம் பட்சம் தான்.
மணிமேகலை பதிவு:
அதனால் தான் நான் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டேன். இந்த சீசனில் மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்துகிறார். குறிப்பாக, அவர் ஆங்கர் பார்ட்டில் எல்லாம் தலையிடுகிறார். அவர் நிகழ்ச்சியில் குக்காக இருக்க வேண்டும். ஆனால், அதை அவர் அடிக்கடி மறந்து விட்டு வேண்டுமென்றே என்னை வேலை செய்ய விடாமல் ஆங்கர் பகுதிகளில் நிறைய குறுக்கிடுகிறார். இது போன்று என்னை யாரும் நடத்தியது கிடையாது என்று எமோஷனலாக பதிவிட்டு இருந்தார். இப்படி இவர் சொன்னது தொகுப்பாளினி பிரியங்காவை தான் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.
பயில்வான் ரங்கநாதன் வீடியோ:
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பிரபலங்கள் பலருமே மணிமேகலைக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் சுசித்ரா, பிரியங்காவை விமர்சித்து மணிமேகலைக்கு ஆதரவாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பயில்வான் ரங்கநாதன், சுசித்ரா வீடியோவில் பிரியங்கா தன்னுடைய தம்பியின் மனைவி. அவனுடைய வாழ்க்கையை கெடுத்தது பிரியங்கா தான் என்று சொன்னார். அவள் ஒரு ஆள் மயக்கி. சிரிச்சு சிரிச்சு பேசி ஒருவருடைய பலவீனத்தை தெரிந்துகொண்டு அவர்களை அடிமையாக்கி விடுவார்.
https://www.youtube.com/watch?v=L9SNZjByrlU
சுசித்ரா சொன்னது:
காதலிக்கும்போது எல்லாவற்றையும் விழுந்து விழுந்து செய்வான், பத்திரமாக பார்த்துக் கொள்வான். ஆனால், திருமணத்திற்கு பின்பு அவனை அடிமையாக்க நினைத்ததால் பிரியங்காவின் உடைய கணவர் அவரிடமிருந்து விலக முடிவு செய்துவிட்டார் என்பது போல சுசித்ரா சொல்லியிருக்கிறார். சுசித்ரா எல்லா விஷயங்களையும் முந்திக் கொண்டு பேசுவார். ஆனால், இது அவருடைய தம்பி வாழ்க்கை என்பதால் பெரிதாக பேசவில்லை. இதை நாம் விசாரித்து தான் சொல்ல வேண்டும். ஆனால், சொந்த தம்பி கிடையாது. அந்த பதிவில் அவர் சொந்த தம்பி என்று சொல்லவில்லை. ஏதோ ஒரு முறையில் பிரியங்காவின் கணவர் சொந்தம் என்று தான் சொல்லியிருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=KVLPIZ2bRgI
பிரியங்கா குறித்து சொன்னது:
மேலும் , விஜய் டிவியில் ஆரம்ப காலத்தில் இருந்த பாவனா, டிடி போன்ற பிரபலமான தொகுப்பாளர்கள் வெளியேறிய பிறகு பிரியங்காவுக்கு மட்டும் தான் வரவேற்பு அதிகமாக விஜய் டிவி கொடுத்தது. பிரியங்காவும் ரசிகர்கள் ஒரு படை இருப்பது உண்மைதான். அதனால் அவருக்கென்று ஒரு தனி கௌரவம் எதிர்பார்க்கிறார். இதை இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே கமலிடம் காண்பித்தார். அதோடு பிரியங்கா நிறைய விஷயங்களில் நோஸ்கட்டுமே வாங்கியது அனைவருமே அறிந்ததுதான். என்னை ஒரு முறை பேட்டி எடுக்கும் போதும் கூட பிரியங்கா நோஸ்கட் வாங்கி தான் போனார் என்று கூறி இருக்கிறார்