இந்த விஷயத்தில் ஜோதிகாவுடைய நடத்தை சரியில்லை - பயில்வான் ரங்கன்தான் கிளப்பிய சர்ச்சை.

By Dhilip Kumar · 28/4/2024

நடிகை ஜோதிகாவை விமர்சித்து பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான ஜோடிகளாக வலம் வருபவர் சூர்யா- ஜோதிகா. இவர்கள் இருவரும் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக திகழ்பவர்கள். அதிலும் தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஜோதிகா. இவர் இந்தி படத்தின் மூலம் தான் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார்.

பின் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கிறார். பிறகு தன்னுடன் நடித்த நடிகர் சூர்யாவை ஜோதிகா காதலித்து திருமணம் செய்து கொண்டார். முதலில் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்புகள் பல வந்தாலும் பல போராட்டங்களுக்கு பிறகு இருவருமே திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்குப் பிறகு ஜோதிகா சினிமாவில் இருந்து கொஞ்சம் ப்ரேக் எடுத்துக்கொண்டார். மீண்டும் இவர் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார்.

சூர்யா-ஜோதிகா திரைப்பயணம்:

அதனைத் தொடர்ந்து இவர் மகளிர் மட்டும், நாச்சியார், செக்க சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி, பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பே போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு ஜோதிகா அவர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும், இவர் நடிகை என்பதை தாண்டி தயாரிப்பாளரும் ஆவார். சூர்யா- ஜோதிகா இருவரும் ஒன்றாக இணைந்து 2டி என்டர்டைன்மென்ட் எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வைக்கிறார்கள்.

https://www.youtube.com/watch?v=2geG8UZAHbw

ஜோதிகா குறித்து சொன்னது:

இதுவரை இவர்கள் பல சூப்பர் ஹிட் படங்களை வெளியிட்டு இருக்கிறார்கள். கடந்த ஆண்டு சூர்யா-ஜோதிகா இருவரும் பிள்ளைகளின் படிப்புக்காக மும்பையில் செட்டில் ஆகி இருக்கிறார். சமீப காலமாகவே ஜோதிகா உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது ஜோதிகா பாலிவுட்டிலும் கால் தடம் பதித்திருக்கிறார். அஜய் தேவ்கானுக்கு ஜோடியாக இவர் நடித்த சைத்தான் படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ஜோதிகா குறித்த விமர்சனம்:

இதை தொடர்ந்து இவர் இன்னும் இரண்டு பாலிவுட் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் நடிகர் சூர்யா, மும்பையில் இருந்து வந்து தன்னுடைய ஓட்டை போட்டிருந்தார். ஆனால், ஜோதிகா மட்டும் நேபாளிக்கு டூர் சென்றிருந்ததால் ஓட்டு போட முடியவில்லை என்று வீடியோ வெளியிட்டு இருந்தார். இதற்கு நெட்டிஷன்கள் பலரும் ஜோதிகாவே விமர்சித்து இருந்தார்கள். தற்போது இந்த விவகாரம் தொடர்பாக நடிகரும், பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

பயில்வான் ரங்கநாதன் வீடியோ:

அதில் அவர், ஜோதிகா வாக்களிக்க வராதது குறித்து பத்திரிகையாளர்களுடைய பேச்சை பார்க்கும்போது சிவகுமார் உடைய மனநிலை எப்படி இருந்திருக்கும்? மகன் மட்டும் வந்து வாக்களிக்கிறார். ஆனால், மருமகள் வரவில்லை. இந்த விஷயத்தில் ஜோதிகாவுடைய நடத்தை சரியில்லை. மாமியார், மாமனாருக்கு அவர் அடங்கி இருக்க வேண்டும் கணவனும் மனைவியும் ஒன்றாக தான் இருக்க வேண்டும். அதையெல்லாம் ஜோதிகா மறந்து விட்டார் என்றெல்லாம் மோசமாக விமர்சித்து பேசி இருக்கிறார். இதை பார்த்து சூர்யா ரசிகர்கள் பயில்வானை கடுமையாக கண்டித்து ட்ரோல் செய்தும் வருகிறார்கள்

Tamil Behind Talkies AMP · Quick view
View full