அங்கு என்ன நடந்ததுன்னு அவனிடம் கேட்கிறேன் - விஷால் காதல் பற்றி தர்ஷிகா உருக்கம்
விஷால் தொடர்பான சர்ச்சைகளுக்கு பிக் பாஸ் தர்ஷிகா போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைராக்கப்பட்டு வருகிறது.விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி 93 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.
இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, தர்ஷிகா, ரஞ்சித், ஜெப்ரி, அன்ஷிதா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.
பிக் பாஸ் 8:
கடந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்றது. இந்த டாஸ்கில் ராயன் தான் வெற்றி பெற்றார். முத்துக்குமரன் 2 புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்று விட்டார் என்று சொல்லலாம். அதோடு கடந்த 13 வது வாரத்திற்கான நாமினேசனில் தீபக், பவித்ரா, ராணவ், ஜாக்லின், ராயன், அருண், விஷால், மஞ்சரி ஆகியோர் பெயர்கள் இடம்பெற்று இருந்தது. இதில் ராணவ், மஞ்சரி வெளியேறி இருந்தார்கள். நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்குவதால் போட்டியாளர்கள் மத்தியில் போட்டி, சண்டை, சச்சரவு எல்லாம் நடந்து கொண்டு இருக்கிறது.
நிகழ்ச்சி குறித்த தகவல்:
தற்போது பிக் பாஸ் வீட்டில் எட்டு போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து ஏற்கனவே வெளியே போயிருந்த போட்டியாளர்களில் எட்டு பேர் உள்ளே வந்திருக்கிறார்கள். இவர்கள் வந்தவுடன் பிக் பாஸ் வீடே ரணகளமாக இருக்கிறது. ஒவ்வொருவரும் போட்டியாளரும் தங்களுடைய கருத்துக்களை சொல்வதாக மற்ற போட்டியாளர்களை வைத்து செய்கிறார்கள். அந்த வகையில் அர்னவ், சாச்சனா செய்து இருந்தது செம மாஸ்.
விஷால் மீது குற்றச்சாட்டு:
குறிப்பாக, விஷால் காதல் என்ற பெயரில் அன்ஷிதா, தர்ஷிகாவிடம் செய்தது பற்றி எல்லோரும் பேசி இருந்தார்கள். இதனால் விஷால் ரொம்ப வருத்தப்பட ஆரம்பித்துவிட்டார். அன்ஷிதா, தர்ஷிகா வெளியேறியதற்கு விஷால் தான் காரணம் என்று கூறியிருந்தார்கள். இதனால் அவர் ரொம்ப எமோஷனலாக அழுது இருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக தர்ஷிகா இன்ஸ்டாவில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், பிக் பாஸ் உள்ளே நுழைந்த யாரிடமும் நான் என்னுடைய எலிமினேஷன் பற்றி கேட்கவே இல்லை. அது 24 மணி நேரம் நிகழ்ச்சி பார்ப்பவர்களுடைய கேள்வியாக தான் இருக்கிறது.
தர்ஷிகா பதிவு:
நான் வெளியேறியதற்கு முழுக்க முழுக்க நானே பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். அதற்கு வேற யாரையும் குற்றம் சொல்லவில்லை. நான் வேண்டுமென்று யாரையும் தவறாக வழி நடத்தவில்லை. அங்கு என்ன நடந்தது என்பதை நான் சம்பந்தப்பட்டவரிடம் கேட்க வேண்டும். அதுவும் அந்த இடத்தில் கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன். மற்றவர்கள் அதை வைத்து ட்ரோல் செய்தும் கிண்டல் செய்வதையும் நான் விரும்பவில்லை. அதனால் தயவு செய்து அதை எல்லோரும் தவிர்த்து விடுங்கள் என்று கூறியிருக்கிறார்.