அவர் பாட்டை அவரே காப்பியடித்தாரா அனிருத் ? அரபிக் குத்து இந்த பாடலின் காப்பியா ? இத கேளுங்க.

By Ajju · 8/2/2022

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடிசூடா மன்னனாக பட்டைய கிளப்பிக் கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வரும் படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் தற்போது பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. மேலும், இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=awAm-WrFq_w

தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் தீம் மியூசிக் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த நிலையில் ‘பீஸ்ட்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் விஜய்க்காக ‘பீஸ்ட்’ படத்தில் பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

நெல்சன் – சிவர்கார்த்திகேயன் கூட்டணி:

மேலும், இந்த படத்தின் முதல் சிங்கள் குறித்த ப்ரோமோ வீடியோ எல்லாம் வெளியாகி இருந்தது. ஏற்கனவே, நெல்சன் – சிவர்கார்த்திகேயன் கூட்டணியில் வெளியான டாக்டர் படத்தில் இடம்பெற்ற செல்லமா’ பாடலும் ‘ஓ பேபி’ பாடலும் சிவகார்த்திகேயன் தான் எழுதி இருந்தார். அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அதே பாணியில் பீஸ்ட் படத்தில் முதல் பாடலுக்கும் ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

https://www.youtube.com/watch?time_continue=16&v=yyN7SnE7kJQ&feature=emb_title

பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள்:

நெல்சன்- அனிருத்- சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி இருக்கும் பாடலுக்கு அரபிக் குத்து என்று பெயரிடப்பட்டு உள்ளது. மேலும், இந்த அரபிக் குத்து பாடல் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு முன்பே இந்தப் பாடலின் ப்ரோமோ வீடியோவின் இறுதியில் சிறிய கிலிம்ப்ஸை வெளியிட்டிருந்தனர். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அரபிக் குத்து பாடல் டான் படத்தின் தீம் ம்யூசிக் போலவே இருக்கிறது என்றும் அவர் பாட்டை அவரே காப்பியடித்து இருக்கிறார் என்று அனிரூத்தை விமர்சித்து வருகிறார்கள்.

டான்- பீஸ்ட் பாடல்:

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் டான். இந்த படத்திற்கும் அனிருத் தான் இசை அமைத்து இருக்கிறார். அதேபோல் விஜய்யின் பீஸ்ட் படத்திலும் அனிரூத் தான் இசை அமைத்து இருக்கிறார். இந்த நிலையில் தற்போது வெளியாக இருக்கும் பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடல் டான் படத்தின் தீம் ம்யூசிக் போல் இருப்பதால் அரபிக் குத்து பாட்டையும், டான் படத்தின் தீம் மியூசிக்கையும் ஒன்றாக இணைத்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் ட்ரெண்டிங் ஆக்கிய வைக்கிறார்கள்.

கில்லி படத்தின் அர்ஜுனரு வில்லு பாடல்:

அதுமட்டும் இல்லாமல் கில்லி படத்தின் அர்ஜுனரு வில்லு பாடல் ஓன்று பீஸ்ட் படத்தில் வந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அனிருத் அவர்கள் ரீமேக் செய்து பாடல்களை வெளியிடுவதில் கைதேர்ந்தவர். அதே போல் நடிகர்கள் நடித்த படங்களின் பாடல்களை ரீமேக் செய்து வெளியிட்டு வருகிறார். தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தில் அனிரூத் பாடல்கள் எல்லாம் ஹிட் ஆகுதா? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full