‘பீஸ்ட்’ கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் - விஜய் மீது வழக்கு பதிவு செய்ய பால் முகவர்கள் சங்கத் தலைவர் டிஜிபியிடம் புகார்

By Rajkumar · 31/3/2022

பீஸ்ட் படத்தின் கட்டவுட் போஸ்டர்களுக்கு பாலாபிஷேகம் செய்ததால் விஜய் மீதும், ரசிகர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் சங்கம் அளித்துள்ள புகார் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளி வரும் படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம் பெறும். கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் தற்போது பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். தற்போது இந்த படத்தின் பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றது. அதோடு இந்த படத்தின் அரபிக்குத்து பாடல் காதலர் இந்த முன்னிட்டு வெளியாகி இருந்தது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் விஜய்க்காக எழுதியிருக்கிறார். மேலும், விஜய்யின் அரபிக் குத்து பாடல் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

பீஸ்ட் படம் பற்றிய தகவல்:

அதுமட்டும் இல்லாமல் இந்த பாடலுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் நடனமாடி வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள். இந்த பாடல் மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் சென்று சாதனை படைத்துள்ளது. இதனை தொடர்ந்து பீஸ்ட் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த பாடல் ஜாலியோ ஜிம்கானா என்று தொடங்குகிறது. இந்த பாடலை கு. கார்த்திக் எழுதி இருக்கிறார். இந்த பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டும் இல்லாமல் விஜய்யின் பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் 13ம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் மீது அளித்த புகாரில் கூறியது:

இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் காவல் ஆணையர் சங்கர் ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளித்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பது, நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் படம் வெளியாக இருப்பதால் இதை கொண்டாட ரசிகர்கள் பலரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திரைப்பட கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.

பீஸ்ட் படத்தின் கட்டவுட்டுக்கு ரசிகர்கள் செய்தது:

அப்போது 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் கேனில் பாலை நிரப்பி அதை ஒரு கையால் தூக்கி கொண்டு 'கரணம் தப்பினால் மரணம் நிச்சயம்' என்ற நிலையில் தங்களின் குடும்பத்தை பற்றியோ அல்லது தங்களின் உயிரை பற்றியோ, அருகில் உள்ள ரசிகர்களின் பாதுகாப்பு மற்றும் அவரது எதிர்காலம் குறித்து சிறிதும் கவலைப்படாமல் கட்டவுட் மீது ஏறி நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்துள்ளனர். ஏற்கனவே தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியான போது அவர்களின் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய மேலேறிய போது கட்டவுட் சரிந்து விபத்து ஏற்பட்டதால் சில ரசிகர்கள் உயிர் இழந்தும், பல ரசிகர்கள் கை, கால் உள்ளிட்ட உடல் உறுப்புகளை இழந்து இருந்தார்கள். இது அனைவருக்கும் தெரிந்ததே.

கட்டவுட் வைக்க தடை விதிக்க காரணம்:

இருந்தும் ரசிகர்கள் நடிகர்களுக்கு பாலபிஷேகம் செய்கிறார்கள். தற்போது விஜய் ரசிகர்கள் அருகில் உள்ளவர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதை அறிந்த பின்னரும் விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் 100 அடிக்கும் மேலான கட்டவுட்டின் மீது ஏறி மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்திருக்கிறார்கள். ரசிகர்களின் இந்த ஜாக்கிரதையான செயல்களை கண்டித்து ரசிகர்களை நல்வழிப்படுத்த தவறிய நடிகர் விஜய் மீதும், பாலபிஷேகம் செய்த ரசிகர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில் திரையரங்குகளில் எந்த ஒரு நடிகரின் கட்டவுட்களின் மீது ஏறி மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்வதற்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இப்படி இவர்கள் அறிவித்துள்ள புகார் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full