பீஸ்ட் பட ப்ரோமோஷன், 10 ஆண்டுக்கு பின் விஜய்யின் பேட்டி - வெளியான ப்ரோமோ இதோ. அட, இவர் தான் Anchorஆ (அப்போ செமயா இருக்குமே)

By Rajkumar · 3/4/2022

சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பீஸ்ட் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். கடைசியாக விஜய்யின் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=0E1kVRRi6lk

இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து அரபிக்குத்து பாடல், ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த பாடலுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் நடனமாடி வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள்.

பீஸ்ட் படத்தின் ட்ரைலர்:

மேலும், இந்த பாடல் வெளியாகி மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் சென்று சாதனை படைத்துள்ளது.மேலும், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இருந்த பீஸ்ட் படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருக்கிறார். ட்ரெய்லர் ஆரம்பத்தில் செல்வராகவன் கதை சொல்வது போல் காண்பிக்கிறார்கள். ஒரு மாலில் பயங்கரமான தீவிரவாதிகள் ஹைஜாக் பண்ணுகிறார்கள்.

https://www.youtube.com/watch?v=YuHnb3VsFbM&feature=youtu.be

பீஸ்ட்டின் கதை :

இந்திய உளவுத்துறையில் விஜய் பணிபுரிந்து வருகிறார். எதர்ச்சையாக கடத்தப்படும் மால் ஒன்றில் விஜயும் சிக்கிக் கொள்கிறார். அப்போது அரசாங்கத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்கிறது.கடத்தப்பட்ட மாலில் தனது துறையை சேர்ந்த ஸ்பை வீர ராகவன் இருப்பதை அறிந்து அவரிடம் மால்லையும் மக்களையும் காப்பாற்றும் பொறுப்பை செல்வராகவன் ஒப்படைக்கிறார். இந்த கடத்தலில் இருந்து விஜய் எப்படி மக்களைக் காப்பாற்றினார்? இதன் பின்னணி என்ன? என்பது தான் சுவாரஸ்யமே என்று கூறப்படுகிறது.

நிராகரிக்கப்பட்ட இசை வெளியீட்டு விழா :

அதோடு தளபதி விஜயின் பீஸ்ட் படம் அடுத்த வாரம் திரைக்கு வர இருக்கிறது. இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் இருக்கிறார்கள். பொதுவாக விஜய் படங்கள் என்றாலே ரிலீசுக்கு முன்னர் இசை வெளியிட்டு விழா ரசிகர்களால் மிகுந்த எதிர்பார்க்கப்படும். அதுவும் இசை வெளியிட்டு விழாவில் விஜய்யின் பேச்சை கேட்கவே அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துகொண்டு இருப்பார்கள்.

சன் டிவி நிகழ்ச்சியில் விஜய் :

இறுதியாக மாஸ்டர் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் விஜய் பேசியது மட்டுமல்லாமல் மேடையில் நடனமாடி இருந்தார். இந்த நிலையில் பீஸ்ட் படத்தின் இசை வெளியிட்டு விழாவை ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்க, பீஸ்ட் படத்திற்கு இசை வெளியீட்டு விழா இல்லை என்று அறிவிப்பு வெளியானது. இருப்பினும் சன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் விஜய் கலந்து கலந்து கொள்ள இருக்கிறார். அதற்காக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full