பேசியல், நைல் பாலிஷ், ஜிம் போனதே கிடையாது - அழகு பராமரிப்பு குறித்து மனம் திறந்த ஜெய்பீம் செங்கேணி
அழகு பராமரிப்பு குறித்து லிஜோமோல் ஜோஸ் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக லிஜோ மோல் திகழ்கிறார். இவர் சிவப்பு மஞ்சள் பச்சை என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் பிரபலமானார். ஆனால், இவர் மலையாளத்திலும் சில படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் இவர் தமிழில் நடித்த ஜெய் பீம் படம் வேற லெவல். இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய் பீம் படம் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது.
இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டு மழையை குவித்தது. ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்த போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டது தான் ஜெய் பீம். இந்தப்படம் வெளிவந்து மக்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த படத்தில் செங்கோணி கதாபாத்திரத்தில் லிஜோமோல் வாழ்ந்திருந்தார் என்றே சொல்லலாம்.
லிஜோ மோல் குறித்த தகவல்:
இதை அடுத்து இவர் தமிழ், மலையாளம் மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் லிஜோமோல் ஜோஸ், நான் மேக்கப்க்காக அதிக செலவே செய்வது கிடையாது. என்னுடைய சரும பராமரிப்புக்காக இதெல்லாம் செய்கிறேன் என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எல்லாம் எதுவுமே கிடையாது. சில பேர் வீட்டில் இருக்கும் பாலாடை, மஞ்சள் போன்ற பொருட்களை வைத்து தங்களுடைய அழகை பராமரிப்பார்கள். அதே போல தான் நானும் செய்வேன். எந்த ஒரு மெனக்கெடலும் பெரிதாக கிடையாது.
லிஜோ மோல் பேட்டி:
அதோடு வீட்டிலேயே முகத்தை சருமத்தை பராமரிக்க தொடர்ந்து செய்ய வேண்டும். அதெல்லாம் என்னால் செய்யவே முடியாது. காரணம், நான் கொஞ்சம் சோம்பேறி. அதே போல் எனக்கு நெயில் பாலிஷ் போடுற பழக்கமே கிடையாது. ரொம்ப வருடங்களாகவே அதை நான் பயன்படுத்துவதில்லை. கர்லி ஹேர் எப்படி மெயின்டன் செய்கிறார்கள் கூட தெரியவில்லை. அதெல்லாம் எனக்கு கொஞ்சம் கஷ்டமான விஷயம். சமீபத்தில் தான் நான் அந்த வேலைகள் எல்லாம் செய்ய ஆரம்பித்தேன். அதற்கு ஸ்பெஷல் ஷாம்பு, கண்டிஷனர், ஹேர் கேர் ஜெல் எல்லாமே இருக்கிறது.
அழகு பராமரிப்பு குறித்து சொன்னது:
வீட்டில் இருக்கும் நேரத்தில் தான் இந்த விஷயங்கள் எல்லாம் செய்வேன். அதையும் நான் தொடர்ச்சியாக செய்வதெல்லாம் கிடையாது. சூட்டிங் நேரத்தில் அந்த கதாபாத்திரத்துக்காக மேக்கப் போட வேண்டும் என்பதால் மட்டும் செய்வேன். பியூட்டி பார்லர் போகிற பழக்கமும் எனக்கு கிடையாது. எப்போவாவது தான் போவேன். அதே போல் பேசியல் பண்ண மாட்டேன். அதிகபட்சமாக நான் காஜல், லிப்ஸ்டிக், சன்ஸ்கிரீன் மட்டும் தான் போடுவேன். இதுதான் என்னுடைய மேக்கப். அதுவும் டிராவல் டைம் நேரத்தில் காஜல் கூட போட மாட்டேன். ஜிம்முக்கு போற பழக்கமும் கிடையாது.
சினிமா குறித்து சொன்னது:
உடல் எடையை குறைக்க எல்லா உணவுகளையும் சாப்பிட்டேன். ஆனால், அளவை குறைத்து விட்டேன். ஒர்க்கவுட் கூட யூடியூப் பார்த்து வீட்டிலேயே செய்தேன். வாழ்க்கையை போற போக்கில் முடிவெடுப்பது தான் சிறந்தது. சக நடிகர், நடிகைகளை பார்த்து நாம் அழகுக்காக இதெல்லாம் செய்ய வேண்டும் என்று எதையும் கற்றுக் கொள்ள மாட்டேன். சினிமாவில் நோ சொல்வது எப்படி என்பது பற்றி மட்டும் இப்போது கற்றுக் கொண்டிருக்கிறேன். பொதுவாக நோ சொன்னால் ஒருவருடைய மனம் கஷ்டப்படும் என்று நினைப்பது என்னுடைய குணம். ஆனால், அதையும் மீறி இப்போதும் நோ சொல்ல கற்றுக் கொண்டேன். இயல்பாக இருப்பதே அழகு, இயற்கையாக இருப்பதே போதும் என்று என்று கூறியிருக்கிறார்.