விஜய் சேதுபதி சீரியலில் நடித்தாரா. அது என்ன சீரியல் தெரியுமா? வைரலாகும் வீடியோ..

By subhashini · 16/3/2020

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. சினிமா உலகில் நுழைந்த குறுகிய நாளிலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் விஜய் சேதுபதி. தன்னுடைய எதார்த்தமான நடிப்பும், பேச்சும் மூலம் தன்னுடைய சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். தற்போது இவர் மக்களின் மக்கள் செல்வனாகவே திகழ்ந்து வருகிறார். இவர் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல் அவ்வபோது சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல உதவிகளை செய்து வருகிறார்.

இதனாலேயே இவருக்கு குறுகிய காலத்தில் தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர். இவர் 2000-ம் ஆண்டில் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார்.

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் தான். அந்த அளவிற்கு அவருடைய எதார்த்தமான நடிப்பும், கதைகளும் உள்ளது. கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த சங்கத்தமிழன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இன்று தமிழ் சினிமா உலகில் புகழின் உச்சத்தில் இருக்கிறார்.

https://youtu.be/I8WtiZE8ROg

அதற்கு முழு காரணம் அவரின் உழைப்பு மட்டும் தான். ஜூனியர் ஆர்டிஸ்டாக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி இன்று தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் சினிமா உலகிற்கு வருவதற்கு முன் பல குறும்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு சீரியலில் கூட நடித்து உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இந்த தகவல் கேட்டு ரசிகர்கள் கொஞ்சம் ஷாக்காகி உள்ளார்கள். சன் தொலைக்காட்சியில் 2006 ஆண்டு ஒளிபரப்பான பெண் என்ற சீரியலில் விஜய் சேதுபதி அவர்கள் பரணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். தற்போது இவர் இந்த சீரியலில் நடித்த பாடல் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. தற்போது நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இது அனைவருக்கும் தெரிந்ததே. இதற்கு முன்பு கூட நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் ரஜினியின் பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் யாதும் ஊரே யாவரும் கேளிர், மாமனிதன், காத்துவாக்குல ரெண்டு காதல், லாபம் போன்ற பல தமிழ் படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full