மேடையில் பாட்டு பாடி கொண்டிருக்கும்போதே பென்னி தயாளுக்கு ஏற்பட்ட விபத்தால் ரசிகர்கள் அதிர்ச்சியாகி இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான பாடகராக திகழ்பவர் பென்னி தயாள். இவர் மேற்கத்திய பாணியில் பாப் இசை பாடுவதில் வல்லவர். இவர் 2002 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து ஹிட் கொடுத்த படங்களில் ஒன்று பாபா.

இந்த படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான மாயா மாயா என்ற பாடலை பாடி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பென்னி. இதனை தொடர்ந்து இவர் ஏ ஆர் ரகுமான் இசையில் பல பாடல்களை பாடி இருக்கிறார். பின் இவர் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜய், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் பாடி இருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராத்தி, பெங்காலி என பல மொழிகளில் பாடியிருக்கிறார்.

Advertisement

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி:

பின் இவர் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். பல ஆண்டு காலமாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இது ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

பென்னி இசைப்பயணம்:

தற்போது ஒன்பதாவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. பென்னி கடைசியாக “தி லெஜெண்ட்” திரைப்படத்தின் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் “வாடி வாசல்” என்ற பாடலை பாடியிருந்தார். இந்த நிலையில் பாடகர் பென்னி தயாளுக்கு விபத்து ஏற்பட்டிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

Advertisement

இசை நிகழ்ச்சியில் பென்னி:

அதாவது, சமீபத்தில் பென்னி தயாள் அவர்கள் சென்னையில் உள்ள விஐடி கல்லூரியில் நடந்த இசை கச்சேரியில் கலந்து கொண்டிருந்தார். அப்போது அவர் மேடையில் பாடி கொண்டிருக்கும் போது திடீரென அவர் தலைக்கு பின்னால் வந்த ட்ரோன் கேமரா அவர் மண்டையை பதம் பார்த்திருக்கிறது. இதனால் அவர் கீழே விழுந்து இருக்கிறார். உடனே இதை பார்த்து ரசிகர்களும் மாணவர்களும் பதறிப் போனார்கள். இந்த விபத்து எதிர்பாராத வகையில் நடந்திருக்கிறது.

Advertisement

பென்னிக்கு ஏற்பட்ட விபத்து:

இதனால் பென்னி தயாளாவிற்கு லேசான காயம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் அவரை உடனடியாக அங்கிருந்து அழைத்து சென்று விட்டனர். இதன் காரணமாக இசை நிகழ்ச்சி பாதிலேயே நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் ஃட்ரோன் கேமராக்களை கையாள தெரியாமல் அதனை இயக்குபவர் செய்த தவறுதான் இதற்கு காரணம் என்று ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.

Advertisement