சிறந்த நடிகைகள் 2024 : நடிப்பில் சிறந்து விளங்கிய தமிழ் நடிகைகள் பட்டியல் , லிஸ்ட் இதோ
2024 ஆம் ஆண்டு சிறந்து விளங்கிய நடிகைகளின் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒவ்வொரு வருடமும் திரையுலகில் சிறந்து விளங்கியவர்களுடைய பட்டியல் வெளியாகும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் சிறந்த விளங்கிய நடிகைகளின் பட்டியல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது.
சாய் பல்லவி:
மலர் டீச்சர் ஆக ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்த சாய் பல்லவி தற்போது இந்திய சினிமா உலகில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பிடித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு இவர் நடித்திருந்த அமரன் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. இந்த படத்தில் இவர் இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதை விட வாழ்ந்து இருந்தார் என்றே சொல்லலாம்.
மாளவிகா மோகனன் மற்றும் பார்வதி:
பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகியிருந்த படம் தங்கலான். இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தில் மாளவிகா மோகன் மற்றும் பார்வதியின் நடிப்பு மிரட்டலாக இருந்தது.
ப்ரியா பவானி சங்கர்:
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக பிரியா பவானி சங்கர் திகழ்ந்து கொண்டிருக்கிறார். சமீப காலமாகவே இவர் ராசில்லாத நடிகை என்று அனைவராலும் ட்ரோல் செய்யப்பட்டிருந்தார். அந்த வகையில் இந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியாகியிருந்த டிமான்டி காலனி, பிளாக் படங்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது. இதன் மூலம் இவர் மீண்டும் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்திருக்கிறார்.
துஷாரா விஜயன்:
தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்தில் ரசிகர்கள் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் துஷாரா விஜயன். இந்த ஆண்டு இவருடைய நடிப்பில் வெளியாகியிருந்த வேட்டையன் மற்றும் ராயன் படங்கள் மிகப்பெரிய அளவில் பாராட்டைப் பெற்றிருந்தது. அது மட்டுமில்லாமல் இந்த இரு படங்களிலும் இவருடைய கதாபாத்திரம் பேசப்பட்டது.
ஸ்ரீ கௌரி ப்ரியா:
மாடர்ன் லவ் சென்னை படத்தின் மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்டவர் கௌரி பிரியா. இந்த ஆண்டின் இவர் நடிப்பில் வெளியாகியிருந்த லவ்வர் படம் மிகப்பெரிய அளவில் பாராட்டை பெற்றிருந்தது.
சுவாசிகா மற்றும் சஞ்சனா:
இந்த 2024 ஆம் ஆண்டு வெளியான படங்களில் அனைவர் கவனத்தையும் ஈர்த்த படங்களில் ஒன்று லப்பர் பந்து. இந்த படத்தில் ஹீரோக்களை விட கதாநாயகிகளான சுவாசிகா மற்றும் சஞ்சனா நடிப்பு தான் மிகப் பெரிய அளவில் பாராட்டை பெற்றிருந்தது.
நிகிலா விமல் மற்றும் திவ்யா துரைசாமி:
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான வாழை படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படத்தில் நடித்த திவ்யா துரைசாமி, நிகிலாவின் நடிப்பு அருமை.
ஊர்வசி:
நடிப்பு அரக்கி என்று பெயர் போனவர் ஊர்வசி. இவருடைய நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகியிருந்தது ஜே.பேபி படம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றிருந்தது.
தமன்னா:
தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் தமன்னா. இந்த ஆண்டு இவருடைய நடிப்பில் வெளியாகியிருந்த அரண்மனை 4 படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. அதுமட்டுமில்லாமல் இதுவரை நாம் திரையில் பார்த்திடாத தமன்னாவை இந்த படத்தில் பார்க்க முடிந்தது. இந்த படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்கி நடித்திருந்தார்.
மஞ்சு வாரியர்:
மலையாளத்தில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்பவர் மஞ்சு வாரியர். இவருடைய நடிப்பில் தமிழில் வெளியாகியிருந்த அசுரன் படம் மிகப்பெரிய அளவில் பாராட்டை பெற்றிருந்தது. அதை தொடர்ந்து இவர் தமிழில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு மஞ்சு வாரியார் நடிப்பில் வெளியாகியிருந்த விடுதலை 2 படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி- விஜய் சேதுபதி நடிப்பில் இந்த படம் வெளியாகியிருந்தது.