அம்பானி மகள் திருமணத்தில் பாடிய ஹாலிவுட் பாடகிக்கு இத்தனை கோடி சம்பளமா..!

By Rajkumar · 13/12/2018

ஆசியாவின் மிக விலை உயர்ந்த திருமணம்’ என்ற சாதனையைப் படைத்துள்ளது, அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமணம். உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், பெரும் தொழிலதிபர் அஜய் பிரமாலின் மகன் ஆனந்த் பிரமாலுக்கும் நேற்று  (டிசம்பர் 12) நடைபெற்றது.

இதில் உலகப் பிரபலங்கள், பாலிவுட் நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் எனப் பல ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர். இந்த திருமணம் ரூ.722 கோடியில் நடப்பதாக கூறப்படுகிறது.இது  37 வருடத்திற்கு முன்பு இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்- டயானா தம்பதியரின் திருமணம் ஆடம்பரமாக அதிக செலவில் நடந்ததற்கு இரண்டாவது அதிக செலவு.

இந்த திருமணத்தில் பங்கேற்க வந்த பிரபலங்களை 
அழைத்து செல்வதற்கு மட்டும் 50 தனி விமானங்கள், 1500-க்கும் மேற்பட்ட கார்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு இருந்தன. மேலும், இந்த திருமணத்தில் பாட பிரபல பாலிவுட் பாடகி பேஒன்ஸ்சும் அழைத்து வரபட்டார்.

இதுவரை எந்த ஒரு திருமண விழாவிலும் பாடிறாத
பேஒன்ஸ், அம்பானி வீட்டு திருமணத்தில் பாடுகிறார் என்றால் சும்மாவா. இதற்காக அவருக்கு 4 மில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 28 கோடி வழங்கபட்டதாக கூறப்படுகிறது. 

Tamil Behind Talkies AMP · Quick view
View full