'ஜனநாயகன்' ரீமேக் படமா? 'பகவந்த் கேசரி' பட இயக்குநர் அனில் ரவிபுடி சொன்ன விஷயம்
தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் கடைசியாக விஜயின் நடிப்பில் வெளியாகியிருந்த ‘கோட்’ படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் விஜய் நடிக்கிறார்.
இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பாபி தியோல், கௌதமேனன், பிரியாமணி உட்பட பாபி நடித்து இருக்கிறார்கள். தெலுங்கில் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான KVN தான் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. மேலும், இந்த படம் விஜய்யின் கடைசி படம் என்பது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த படம் ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
ஜனநாயகன் படம்:
மேலும், சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக மலேசியாவில் நடைபெற்று இருந்தது. மலேசியாவே மிரள வைக்கும் அளவிற்கு இந்த விழாவை நடத்தி இருந்தார்கள். இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய விஷயங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி இருந்தது. தற்போது ஜனநாயகன் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ரீமேக் சர்ச்சை:
இது ஒரு பக்கம் இருக்க ஜனநாயகன் படம் தெலுங்கில் வெளிவந்த பகவந்த் கேசரி படத்தின் உடைய தமிழ் ரீமேக் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு தான் பகவந்த் கேசரி வெளியாகியிருந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வு ஒன்றில் நடிகர் வி டிவி கணேஷ், விஜய் சார், பகவந்த் கேசரி படத்தை பலமுறை பார்த்துவிட்டார். இயக்குனர் அனில் ரவிபுடி இடம் படத்தை ரீமேக் செய்வோம் கேட்டார். ஆனால், இயக்குனர் ரீமேக் செய்ய மாட்டேன் என்று சொன்னதாக தகவலை கூறியிருந்தார்.
இயக்குனர் பேட்டி:
இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஜனநாயகன் ரீமேக் படம் என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இப்படி இருக்கும் நிலையில் பகவந்த் கேசரி படத்தின் இயக்குனர் அனில் ரவிபுடி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், விஜய் சார் ஒரு ஜென்டில்மேன். அவருடைய போர்வெல் படத்தில் எனக்கு ஏதேனும் ஒரு பங்கு இருக்கிறதா இல்லையா என்பது படம் வெளியான பிறகு தான் தெரியும். அதுவரை இது தளபதி விஜய் படமாகவே பார்க்கலாம் என்று கூறியிருக்கிறார்