ஹரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மோகன் குறித்து பாக்கியராஜ் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் 80, 90 காலகட்டங்களில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் மோகன். இவர் ரஜினி ,கமல், விஜயகாந்த் என்று பல முன்னணி நடிகர்கள் பட்டைய கிளப்பி கொண்டு இருந்த கால கட்டத்தில் இவர்களுக்கு எல்லாம் செம்ம காம்படீசன் கொடுத்தவர். 80களில் இவரது நடிப்பின் மூலம் தனெக்கென்ற ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர்.

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவுலகில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் மோகன். இவர் 1982 ஆம் ஆண்டு பயணங்கள் முடிவதில்லை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின் இவருடைய எல்லா படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட். மேலும், வருடம் வருடம் சிறந்த நடிகர் விருதையும் இவர் தான் பெறுவார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகலும் சக்கை போடு போட்டு கொண்டு நடித்தார். இவரை எல்லோரும் மைக் மோகன் என்று தான் அழைப்பார்கள்.

Advertisement

மோகன் திரைப்பயணம்:

இவர் கிட்டத்தட்ட 70 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவருடைய படம் எல்லாமே வித்தியாசமான கதை களம், சூப்பர் ஹிட் பாடல்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். கமலஹாசனுக்கு அடுத்த படியாக காதல் மன்னனாக வலம் வந்த நடிகர் மோகன் சில பொய்யான வதந்தியால் அப்படியே அவருடைய வாழ்க்கை பாதையை மாறிவிட்டது. இறுதியாக தமிழில் 2008ஆம் ஆண்டு வெளியான சுட்டபழம் என்ற படத்தின் மூலம் மோகன் ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

ஹரா படம்:

இப்படி ஒரு நிலையில் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் மோகன் ‘ஹரா’ என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கி வருகிறார். இந்த படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் சுரேஷ் மேனன் நடிக்கிறார். இவர்களுடன் இப்படத்தில் கவுஷிக், அனுமோள், குஷ்பு, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், அனித்ரா நாயர், சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Advertisement

படத்தின் இசை வெளியீட்டு விழா:

சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் டீசர், பாடல்களெல்லாம் வெளியாகி இருந்தது. கூடிய விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றுள்ளது. இதில் படக்குழுவினர் உடன் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது இயக்குனர் அப்போது விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பாக்கியராஜ், மோகனைப் பற்றி யாருக்கும் தெரியாத ஒரு விஷயத்தை சொல்கிறேன். சினிமாவுக்கு என்று ஒரு சில பழக்கங்கள், சம்பிரதாயங்கள் இருக்கிறது.

Advertisement

மோகன் குறித்து சொன்னது:

அதில் எதிலுமே மோகன் கலந்து கொள்ள மாட்டார். எப்போதுமே அவர் தன்னுடைய வேலையில் மட்டும் தான் கண்ணும் கருத்துமாக இருப்பார். இன்றும் அவர் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக தான் வைத்திருக்கிறார். அவருக்கு பலமே பாடல்கள் தான். இளையராஜா முதல் டி ஆர் வரை பல பேருடைய இசையில் அவருடைய பாடல்கள் வெற்றி பெற்றிருக்கிறது. எத்தனையோ இசையமைப்பாளர்கள் இசையில் நிறைய பேர் பெயர் எடுத்திருந்தாலும் மோகன் நடிக்கும் போது மட்டுமே அந்த பாடல்கள் அவர் பாடுவது போல் இருக்கும். இந்த குணத்தை சிவாஜி கணேசனிடம் நான் பார்த்திருக்கிறேன். ஒரு இந்தி நடிகரிடம் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு பிறகு மோகன் இடம் தான் அதை பார்த்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement