மகளுக்கு முன் மகன் திருமணத்தை முடித்தது ஏன்? மகனின் திருமண அறிவிப்பை கைப்பட எழுதி வெளியிட்ட பாக்கியராஜ்.

By Arun · 25/4/2024

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் சாந்தனும் ஒருவர். தமிழ் சினிமா உலகில் இயக்குனர், நடிகரான பாக்யராஜ் மற்றும் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் இவர்களின் மகன் தான் சாந்தனு என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 1998 ஆம் ஆண்டு பாக்கியராஜ் நடிப்பில் வெளிவந்த “வேட்டிய மடிச்சு கட்டு” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமானவர். பின் சில ஆண்டுகள் கழித்து 2008 ஆம் ஆண்டு சக்கரகட்டி என்ற திரைப்படத்தில் முதன் முதலாக கதாநாயகனாக அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து ஆயிரம்விளக்கு, கண்டேன், அம்மாவின் கைப்பேசி, சித்து பிளஸ் 2, கதை திரைக்கதை வசனம் இயக்கம், வாய்மை, முப்பரிமாணம், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். இருந்தாலும் சாந்தனு அவர்களுக்கு சினிமாவில் பெரிய அளவு வாய்ப்பு கிடைக்கவில்லை. சமீப காலமாகவே இவர் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சாந்தனு அவர்கள் தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே.

விஜய் அவர்கள் நடித்த மாஸ்டர் படத்தில் சாந்தனு நடித்துஇருந்தார். இறுதியாக ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்திருந்தார்.மேலும், சாந்தனு அவர்கள் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி கீர்த்தி அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கீர்த்தி மிகப் பிரபலமான தொகுப்பாளினி என்பது நம் அனைவருக்குமே தெரியும். இவரை அனைவரும் கீகீ என்று தான் செல்லமாக அழைப்பார்கள்.

சாந்தனு மற்றும் கிகி இருவரும் காதலித்த விஷயம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்த போது இரு வீட்டார் சம்மதத்துடன் தான் இவர்கள்திருமணம் நடைபெற்றது. பெரும்பாலும் பிரபலங்கள் காதலித்தாலே அது சமூக வலைதளத்தில் முணுமுணுக்கப்ட்டு தான் வெளியில் தெரியவரும். ஆனால், சாந்தனு காதலை வெளியுலகிற்கு அறிவித்தது அவரது தந்தை பாக்யராஜ் தான். அதுவும் தனது மகனின் காதலுக்கு பச்சை கொடி காட்டிய விஷயத்தை கைப்பட எழுதி அறிவித்து இருந்தார்.

அதாவது 9 ஆண்டுகளுக்கு முன்னர் இதே தேதியில் தான் பாக்யராஜ் தனது மகனின் காதல் குறித்து கைப்பட கடிதம் ஒன்றை எழுதி அதனை மீடியாக்களுக்கு அறிவித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் அந்த கடிதத்தை பகிர்ந்துள்ள நடிகர் கயல் தேவராஜ் 'இயக்குனரும், நடிகருமான கே.பாக்யராஜ், நடிகை பூர்ணிமா பாக்யராஜ் தம்பதியரின் மகன் நடிகர் சாந்தனு, டி.வி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கீர்த்தி என்பவரை உயிருக்குயிராக காதலித்தார்.

https://twitter.com/kayaldevaraj/status/1783332928392753613

இந்த விஷயம் பாக்யராஜுக்கு தெரிந்தது. அவர் காதல் திருமணம் செய்தவர் என்பதால், மகனின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டி விட்டார். அதை கைப்பட ஒரு கடிதத்தில் எழுதி, மீடியாவுக்கு அனுப்பி வைத்தார். 'பாக்யா' பத்திரிகையின் ஆசிரியர் என்பதால், மீடியாவுக்கு ஒரு செய்தியை எப்படி தெரிவிக்க வேண்டும் என்ற பண்பு தெரிந்திருக்கிறது. அந்த வகையில் பாக்யராஜுக்கு என் பணிவான வணக்கங்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full