-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

இன்னிய வரைக்கும் அத பத்தி அவர் கேட்கவே இல்லை – Sk படத்தை நம்பி பணத்தையும் இழந்த பாக்யராஜ் பட நடிகர்.

0
356

15 நாள் சூட்டில் 30 லட்சம் திருட்டுப் போய் சிவகார்த்திகேயன் மாயமானார் என்று செம்புலி ஜெகன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனரும், நடிகருமாக வலம் வந்து கொண்டிருப்பவர் பாக்கியராஜ். இவர் இயக்கிய பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் இவரின் வெற்றி திரைப்படங்களில் ஒன்று கடந்த 1992ஆம் ஆண்டு வெளியான “ராசுகுட்டி”. இத்திரைப்படத்தில் கதை, இயக்கம், நடிகர் என பல விதமாக பாக்யராஜ் பணியாற்றியிருந்தார்.

-விளம்பரம்-

இப்படத்தின் கதாநாயகனான பாக்யராஜுக்கு குடை பிடிபித்தவாறு சுற்றி திரிந்த நடிகர் தான் இயக்குனர் செம்புலி ஜெகன். இவரின் செம்புலி என்ற கதாபத்திரத்தை யாரும் மறக்க முடியாது. இந்த கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் தான் ஜெகன். இவர் சினிமாவில் நுழைந்த ஆரம்ப காலத்தில் பல இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு அலைந்தார். பின் பாக்யராஜ் இடம் வேலைக்கு சேர்ந்தார். அதன் பின் ஆராரோ ஆரிரரோ என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் அறிமுகமானார்.

செம்புலி இயக்கிய படங்கள் :

அதன் பிறகு சுந்தரகாண்டம் என்ற படத்தில் துணை இயக்குனர் ஆனார். இந்த படம் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் செம்புலி ஜெகன் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் தன்னுடைய திரை பயணம் குறித்து கூறியிருந்தது, நான் பாக்கியராஜ் சார் உடன் தான் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தேன். சொக்கத்தங்கம் படம் முழுக்க நான் தான் திணை இயக்குனராக பணியாற்றினேன். கேப்டன் விஜயகாந்த் உடன் பணியாற்றியது எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. அவர் ரொம்ப நேர்மையான மனிதர்.

பாக்யராஜ்- விஜயகாந்த் குறித்து சொன்னது:

-விளம்பரம்-

அது மட்டும் இல்லாமல் பாக்கியராஜ் சாரை பார்க்க வந்தாலே ஜெகன் இருக்கானா என்று கேப்டன் கேட்பார். மேலும், பாக்யராஜ்- விஜயகாந்த் சாருக்கு நான் தான் ஒரு நல்ல தொடர்பு கருவியாக இருந்தேன். பழைய ஜாவா புல்லட்டில் பாக்யராஜ்- விஜயகாந்த் இருவரும் நிறைய பயணம் செய்திருக்கிறார்கள். இது பலருக்குமே தெரியாது. அந்த அளவிற்கு இருவருக்கும் இடையில் நல்ல நட்பு இருக்கிறது. சொக்கத்தங்கம் படம் பண்ணும்போது இருவருக்கும் நான் தான் கம்யூனிகேஷன் ஆகவே இருந்தேன்.

-விளம்பரம்-

சினிமா குறித்து சொன்னது:

மேலும், ஒரு நடிகனாக இதுதான் நமது தொழில் என்றால் நாம் நான்கு பேரை பார்க்கணும், தேடி போகணும். ஆனால், அதை நான் செய்யவில்லை. யாரிடமும் பழகாமல் போய்விட்டேன். நான் ஒரே இயக்குனருடன் பயணித்து விட்டேன். அதுதான் என்னுடைய மைனசாக போனது. அது மட்டும் இல்லாமல் அது என்னுடைய பிளஸ் ஆகவும் இருக்கிறது. கஷ்டங்கள் எல்லோருக்கும் வருவதைப் போலத்தான் நானும் அனுபவித்தேன். எல்லாரையும் போல நானும் வீடு, வண்டி வாங்கணும் எல்லாம் நினைத்தேன். ஆனால், என்னால் வாங்க முடியவில்லை. பின் தனியாக எனக்கு ஒரு படம் பண்ண வாய்ப்பு வந்தது. ஆனால், அது என்னுடன் இருந்தவர் மிஸ் யூஸ் பண்ணி விட்டார்.

சிவகார்த்திகேயன் குறித்து சொன்னது:

அதே போல் சிவகார்த்திகேயன் டிவி நிகழ்ச்சியில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது மருத்துவமனையில் நடக்கும் ஒரு கதைக்காக அவர் என்னை நடிக்க அழைத்தார். மேக்கப் டெஸ்ட் எல்லாம் எடுக்க ரெடி பண்ணிட்டேன். அன்று தான் சிவகார்த்திகேயன் நிச்சயதார்த்தம். அனைவருக்கும் அட்வான்ஸ் கொடுத்திருந்ததால் திருச்சியில் நிகழ்ச்சியில் முடித்துவிட்டு காரில் அவசர அவசரமாக சிவகார்த்திகேயன் வந்து சேர்ந்து மேக்கப் எல்லாம் போட்டு சூட்டெடுத்தோம். ஆனால், என்ன நடந்தது? என்று தெரியவில்லை. உடனிருந்த யாரோ ஒரு ஆள் 30 லட்சம் ரூபாவை திருடி விட்டு சென்றார். 15 நாட்கள் சூட் நடந்தது. 15 நாள் சூட் முடிந்து சிவகார்த்திகேயன் மாயமானார். அதன்பின் சிவகார்த்திகேயன் சூட்டுக்கு வரவே இல்லை. எந்த தகவலும் தெரியவில்லை. இது நாள் வரை அதை பற்றி சிவகார்த்திகேயன் கேட்கவில்லை ஏன் என்றும் தெரியவில்லை என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news