-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

பாக்கியராஜ் சார பாக்க போனேன், ஆனா அவர் – 90ஸ்ஸில் பிஸியாக நடித்த சிறுவன். இன்று குடும்பத்தை காப்பாற்ற போராடும் சாமானியன்.

0
395

சினிமாவில் ஆரம்ப காலத்தில் படங்களில் நன்றாக நடித்து அதற்குப் பிறகு சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் பல பேர் என்ன ஆனார்கள் என்றே தெரியாமல் போயிருக்கிறது. அந்த வகையில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ராம்குமார். குறிப்பாக இவர் மம்முட்டி நடிப்பில் வெளிவந்த அழகன் என்ற படத்தில் துறை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். நான் என் மனைவி கிட்ட எவ்ளோவே சொல்லிட்டேன்.

-விளம்பரம்-

இந்த படத்தில் நாலு குழந்தை நட்சத்திரங்கள் நடித்திருப்பார்கள். அதில் மூன்று பேர் தற்போது பிரபலமாக இருக்கிறார்கள். அதில் துறை மட்டும் என்ன ஆனார்? என்று தெரியவில்லை. அவரின் உண்மையான பெயர் ராம்குமார். இந்த நிலையில் பிரபல சேனல் சமீபத்தில் அவரை தேடிச் சென்று பேட்டி எடுத்திருக்கிறார்கள். அதில் அவர், என்னுடைய பெயர் ராம்குமார். நான் நிறைய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறேன்.

ராம்குமார் பேட்டி:

என்னுடைய பெற்றோர் சிறுவயதிலேயே இறந்து விட்டார்கள். என்னுடைய பாட்டி தான் என்னை வளர்த்தார். என்னுடைய பாட்டி படங்களில் நடித்திருந்தார். அவர் மூலம் தான் எனக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. வா அருகில் வா, அவசர போலீஸ் 100, அழகன் போன்ற பல பிரபலங்களின் படங்களின் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறேன். நான் 10 வயது இருக்கும்போதே கோயம்புத்தூருக்கு வந்துவிட்டேன். காரணம், என்னுடைய பாட்டி ஒரு விபத்தில் இறந்துவிட்டார்.

சினிமா குறித்து சொன்னது:

-விளம்பரம்-

சென்னையில் எனக்கு யாருமே தெரியாது. என்னுடைய அம்மா உறவினர்கள் கோயம்புத்தூரில் தான் இருந்தார்கள். அதனால் நான் கோயம்புத்தூருக்கு வந்து விட்டேன். அதற்குப் பிறகு எப்படி எப்படியோ வாழ்க்கை சென்றுவிட்டது. ஆனால், என் பாட்டி உயிருடன் இருக்கும் போது மம்முட்டி சாருடன் சேர்ந்து என்னை எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்று பேசியிருந்தார். மம்முட்டி சாரும் படிக்க வைக்கிறேன் என்றெல்லாம் சொல்லி இருந்தார்.

-விளம்பரம்-

பாட்டி குறித்து சொன்னது:

என்னுடைய பாட்டி மட்டும் இருந்திருந்தால் என்னுடைய வாழ்க்கை மாறி இருக்கும். அவர் இல்லாததால் நான் ரொம்பவே கஷ்டப்பட்டேன். அதற்குப் பிறகு கம்பெனிகளில் வேலை செய்து கொண்டிருந்தேன். பின் சின்னதாக ஒரு பிசினஸ் செய்தேன். ஆனால், அது நஷ்டம் அடைந்தது. அதற்கு பின் கொரோனாவால் ரொம்ப சிரமப்பட்டேன். தற்போது ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருக்கிறேன். வேலையில்லாத நேரத்தில் டிரைவராக எல்லாம் வேலை செய்திருந்தேன். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை தான். ஆனால், சரியான வாய்ப்பு, யாரை கேட்க வேண்டும் என்றெல்லாம் தெரியவில்லை.

நானும் அதற்காக முயற்சி செய்யவில்லை. சினிமாவில் வாய்ப்பு தேட சென்றால் குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும், பணம் வேண்டும். அதை எல்லாம் யோசித்து தான் நான் சென்னைக்கு போகவில்லை. ஒருமுறை பாக்யராஜ் சாரை பார்க்க போனேன். அவர் என்னை, சும்மா பார்க்க வந்திருக்கிறான் என்று நினைத்து விட்டார். அதற்குப் பிறகு அவரிடம் கேட்கவும் எனக்கு தயக்கமாக இருந்தது. அதனால் வந்து விட்டேன். கண்டிப்பாக வாழ்க்கையில் ஒரு நாள் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறுவேன் என்று தன்னம்பிக்கையுடன் பேசியிருக்கிறார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news