கிரைம் திரில்லர் பாணியில் வெளிவந்த 'காளிதாஸ் 2' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

By subhashini · 3/4/2026

இயக்குனர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் காளிதாஸ் 2. இந்த படத்தில்
ஹீரோவாக பரத் நடித்திருக்கிறார். இவரை அடுத்து இந்த படத்தில் அபர்னதி, கிஷோர், பிரகாஷ்ராஜ், சங்கீதா, பவானி ஸ்ரீ உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசை அமைத்திருக்கிறார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம் :

காளிதாஸ் படத்தின் முதல் பாகத்தில் தன்னுடைய மனைவிதான் அனைத்து குற்றங்களுக்கும் காரணம் என்று
தெரிய வருகிறது. அதற்குப்பின் கதையும் முடிவடைகிறது. அதற்கு பிறகு தான் காளிதாஸ் 2 வேறொரு கதை களத்தில் நகர்கிறது. படத்தின் ஆரம்பத்தில் வக்கீல் ஒருவர் ரௌடியை கொலை செய்கிறார். அந்த கொலை கேஸை பரத் விசாரிக்கிறார். அப்போது 568 வீடுகள் கொண்ட அப்பார்ட்மெண்டில் இருக்கும் குழந்தை காணாமல் போகிறது.

அந்த குழ்நதையின் பெற்றோர் அபர்ணதி. இந்த வழக்கு பரத்தின் பார்வைக்கு வருகிறது.
பரத் சீக்கிரமாக தன்னுடைய குழுவுடன் சேர்ந்து அந்த குழந்தையை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்.
ஆனால், எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. அதற்குப்பின் பவானி ஸ்ரீ- பரத் இருவரும் சேர்ந்து அந்த வழக்கை விசாரிக்கிறார்கள். அந்த சமயத்தில் தான் குழந்தை பிணமாக கிடைக்கிறது. இந்த குழந்தை கொலையை தொடர்ந்து அதே அப்பார்ட்மெண்ட்டில் மீண்டும் மீண்டும் கொலை நடந்து கொண்டிருக்கிறது.

பரத்-பவானி ஸ்ரீ இருவருக்குமே ஒன்றுமே புரியவில்லை. இந்த கொலைகளை எல்லாம் செய்வது யார்? அந்த வக்கீல் எதற்காக ரவுடியை கொலை செய்தார்? இதற்கெல்லாம் என்ன சம்பந்தம்? இதையெல்லாம் பரத் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பது தான் படத்தின் உடைய மீதி கதை. படத்தின் ஹீரோ பரத் தன்னுடைய அனுபவ நடிப்பை சிறப்பாக கொடுத்து இருக்கிறார். படம் முழுவதும் தன்னுடைய தோளில் சுமந்து சென்றிருக்கிறார் என்று சொல்லலாம்.

இவர் போலீசிற்குரிய கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார். பல ஆண்டுகள் கழித்து நடிகை சங்கீதா படத்தில் நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பு அருமையாக இருக்கிறது. இவர் அடுத்து படத்தில் வரும் பவானி ஸ்ரீ, அஜய் கார்த்தி,அபர்ணதி எல்லோருமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். இயக்குனர் செந்தில் எடுத்திருக்கும் கதைக்களம் அதைக் கொண்டு சென்ற விதமும் நன்றாக இருக்கிறது.
முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. சில காட்சிகள் யூகிக்கக்கூடிய அளவில் இருக்கிறது.

இரண்டாம் பாதி ஆரம்பம் பொறுமையாக இருந்தாலும் கிளைமாக்ஸ் நன்றாக இருக்கிறது. கொலைக்கான காரணம் அதை சுற்றி நடக்கும் காட்சிகள் எல்லாம் படத்திற்கு சுவாரஸ்யத்தை கூட்டி இருக்கிறது. படத்தினுடைய பின்னணி இசை, ஒளிப்பதிவு,எடிட்டிங் எல்லாமே நன்றாக இருக்கிறது. சில காட்சிகள் கொஞ்சம் பில்டப்பாக இருந்தாலும் படத்தில் எந்த ஒரு பாதிப்பும் இல்லை. மொத்தத்தில் எல்லோரும் சென்று பார்க்கும் படமாக தான் இருக்கிறது.

நிறை:

பரத் நடிப்பு

மற்ற நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்

கதைக்களம்

கிளைமாக்ஸ் அருமை

குறை:

இரண்டாம் பாதி ஆரம்பத்தில் பொறுமையாக நகர்கிறது

சில காட்சிகள் யூகிக்க கூடிய அளவிற்கு இருக்கிறது

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

மொத்தத்தில் காளிதாஸ் 2- முயற்சி

Tamil Behind Talkies AMP · Quick view
View full