சீரியலில் குடும்ப குத்து விளக்காக இருக்கும் கண்ணம்மாவா இது ? லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.

By Rajkumar · 5/12/2020

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை ஒளிபரப்ப தொலைக்காட்சிகள் போராடி வருகின்றனர். ஆனால், விஜய் தொலைக்காட்சி படங்களில் தலைப்பில் அடுத்தடுத்து சீரியல்களை வெளியிட்டு வெற்றியை கண்டு வருகிறது. அந்த வகையில் மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் பாரதி கண்ணம்மா என்ற சீரியல் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

பல கொரியன் தொடரை டப் செய்து வரும் தொலைக்காட்சிக்கு மத்தியில் கிருஷ்ணகோலி’’ என்ற வங்காள சீரியலை தழுவி இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தொடரில் பார்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை ரோஷினி. பாரதி கண்ணம்மா சீரியலுக்கு முன்பு பல்வேறு விளம்பர படங்களில் மாடலாக நடித்துள்ளார். மனம் டெக்ஸ்டைல், மேத்தா ஜுவல்லரி, ஆனந்தம் சில்க்ஸ் போன்ற விளம்பரங்களில் நடித்துள்ளார்.

ஆனால், இவருக்கு பாரதி கண்ணம்மாவில் வாய்ப்பை தேடி தந்தது ‘‘ஸ்கேர்ஸ் ஆப் சொசைட்டி’’  என்ற குறும்படம் தான். பிரபல காமெடி நடிகை குண்டு அர்ச்சனா ஆர்த்தி இயக்கிய இந்த குறும்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த குறும்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் நடிகை ரோஷினி. தற்போது பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் அணைத்து இல்லதரிசிகள் மத்தியிலும் பிரபலமடைந்துள்ளார்.

அதிலும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடர் மீம் கிரியேட்டரகளின் கேலிக்கு உள்ளானது. அதன் பின்னர் இந்த தொடர் வேற லெவலில் பிரபலமானது. அதன் பின்னர் விஜய் டிவியின் டாப் சீரியலில் ஒன்றாக இருந்து வருகிறது . கண்ணம்மா சீரியலில் குடும்ப குத்துவிளக்காக இருந்து வரும் ரோஷினி சமீபத்தில் அல்ட்ரா மாடர்ன் லுக்கில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full