என்னது மறுபடியும் 8 ஆண்டுகள் கழித்தா ? ப்ரோமோவை கண்டு ஷாக்கான ரசிகர்கள். (பதறாதீங்க)

By Rajkumar · 24/9/2021

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது.சின்னத் தம்பி பெரியதம்பி, ராஜா ராணி, மௌன ராகம், கடைக்குட்டி சிங்கம் என்று சினிமா டைட்டில்களை வைத்து ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் நல்ல வெற்றியை பெற்றது. அந்த வகையில் இதே பாணியில் சினிமா டைட்டிலை வைத்து ஒளிபரப்பாகி வரும் 'பாரதி கண்ணம்மா' சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்று வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த சீரியலின் TRP வேற லெவலில் எகிறியது.

அதற்கு முக்கிய காரணமே மீம் கிரியேட்டர் தான். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சீரியலில் கண்ணம்மா கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். கண்ணம்மா தொடர்ந்து நடந்து செல்வதை ட்ரோல் செய்து நெட்டிசன்கள் பல்வேறு மீம்களை போட்டு வச்சி செய்து வந்தனர்.

இதையும் பாருங்க : அந்த சம்பவத்துக்கு அப்புறம் விஜய் பயந்துட்டாரு, இப்போ மத்திய அரச எதிர்த்து பேச சொல்லுங்க பாப்போம் - தயாரிப்பாளர் அதிரடி.

இதற்கு முன்னாள் எப்படியோ தெரியவில்லை கண்ணம்மா நடக்க ஆரம்பித்ததிலிருந்து மீம்கள் குவிய இந்த சீரியலின் ரீச் வேற லெவலில் சென்றுது என்று தான் சொல்ல வேண்டும். இதற்கெல்லாம் மேலே சென்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தன் கண்ணம்மாவிற்கு இரட்டை குழந்தை பிறந்தது. ஆனால், ஸ்பெஷல் எபிசோட் என்று மூன்று மணிநேரத்தை ஒளிபரப்பு செய்து மூன்று மணி நேரத்தில் எட்டு வருடங்களை கடந்து விட்டது இந்த சீரியல்.

https://www.youtube.com/watch?v=bIIOBg9DcL8

கண்ணம்மாவிற்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை கண்ணம்மாவின் மாமியாரிடமும் இன்னொரு குழந்தை கண்ணம்மாவிடமும் வளர்ந்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் மீண்டும் சீரியலில் 8 வருடத்தை கடந்து சென்று இருப்பது போலவும், கண்ணம்மாவின் இரண்டு மகள்களும் வளர்ந்து விட்டது போலவும் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. பதற வேண்டாம் இது Fan made தான். இருப்பினும் இந்த ப்ரோமோவில் விஸ்வாசம் அனிகா நடிப்பது போல காண்பிக்கப்பட்டது தான் கொஞ்சம் ஓவர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full