'பாரதி கண்ணம்மா' ரோஷினியின் திடீர் கல்யாணம், மாப்பிளை சினிமா பிரபலமா? யாருன்னு நீங்களே பாருங்க
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி டிஆர்பியில் முன்னிலை வகித்த தொடர்களில் பாரதி கண்ணம்மா ஒன்று. இந்த தொடர் விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடன் சென்றது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் ரோஷினி ஹரிப்பிரியன் நடித்திருந்தார். இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதற்கு முக்கிய காரணம் ரோஷினி தான். அந்த அளவிற்கு இவருடைய கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது.
மேலும், இந்த சீரியல் மூலம் இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் என்று சொல்லலாம். பின் இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் வந்தவுடன் பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக வினுஷா தேவி கண்ணம்மாவாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டிருந்தார்.
ரோஷினி குறித்த தகவல்:
மீண்டும் நிகழ்ச்சியில் ரோஷினை பார்த்தவுடன் உற்சாகம் அடைந்து விட்டார்கள். அதன்பின் ரோஷினி எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. அது மட்டும் இல்லாமல் அவருடைய சினிமா வாய்ப்பு குறித்தும் எந்த தகவலும் தெரியவில்லை. சிறிய இடைவெளிக்கு பிறகு இவர் சசிகுமார், சூரி நடிப்பில் வெளியாகியிருந்த கருடன் படத்தில் ஒரு முக்கிய கதாபாதத்தில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து ரோஷிணி அவர்கள் மெட்ராஸ் மேட்னி என்ற படத்திலும் நடித்திருந்தார்.
ரோஷினி திருமணம்:
இந்த படத்தில் இவருடைய நடிப்பு பெரிய அளவில் பாராட்டப் பெற்றிருந்தது. அதற்கு பிறகு கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியிருந்த தலைவன் தலைவி படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் ரோஷினி நடித்து அசத்தியிருந்தார். அதற்குப்பின் இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், நேற்று ரோஷினிக்கு திடீரென்று திருமணமாகிஇருக்கிறது. அதாவது, நடிகை ரோஷினி, சுந்தரமூர்த்தி என்பவரை தான் திருமணம் செய்து இருக்கிறார்.
ரோஷினி கணவர்:
ரோஷினி திருமணத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலங்கள் கண்மணி, ஃபரினா, காவியா, அருண் உட்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் ரோஷினியின் கணவர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ரோஷினி கணவர் சுந்தரமூர்த்தி ஒரு இசையமைப்பாளர். இவர் பொம்மை நாயகி, ஐரா, தண்டட்டி, பிகினிங், டென் ஹவர்ஸ் போன்ற படங்களுக்கு எல்லாம் இசையமைத்திருக்கிறார். தற்போதும் இவர் படங்களில் பிசியாக பணியாற்றிக் கொண்டுதான் வருகிறார்.