சீரியலில் சென்றது போல நிஜ வாழ்வில் ஏற்பட்ட சோகம் - திடீர் மரணமடைந்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்.

By Rajkumar · 22/3/2021

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரம் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் காலமாகியுள்ள சம்பவம் விஜய் டிவி வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது.சின்னத் தம்பி பெரியதம்பி, ராஜா ராணி, மௌன ராகம், கடைக்குட்டி சிங்கம் என்று சினிமா டைட்டில்களை வைத்து ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் நல்ல வெற்றியை பெற்றது. அந்த வகையில் இதே பாணியில் சினிமா டைட்டிலை வைத்து ஒளிபரப்பாகி வரும் 'பாரதி கண்ணம்மா' சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்று வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த சீரியலின் TRP வேற லெவலில் எகிறியது.

இந்த சீரியலில் கண்ணம்மாவாக ரோஷிணியும், பாரதியாக அருண் பிரசாத்தும் நடித்து வந்தனர். மேலும், இந்த சீரியலில் பாரதியின் தந்தையாக நடிகர் சண்முகம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரபல சீரியல் நடிகர் வெங்கட் தான் தற்போது மாறப்படைப்பு ஏற்பட்டு காலமாகி இருக்கிறார். நடிகர் வெங்கட் செல்லமடி நீ எனக்கு என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

அதன் பின்னர் பல்வேறு சீரியல்களில் நடித்த இவர் பல்வேறு திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் குறிப்பாக பீட்சா சூதுகவ்வும் தெகிடி போன்ற படங்களில் நடித்திருக்கிறார் அதிலும் குறிப்பாக மைனா படத்தில் இவருடைய கதாபாத்திரம் மிகவும் கவனிக்கப்பட்டது செல்லமடி நீ எனக்கு சீரியலை தொடர்ந்து உறவுகள் சங்கமம் சரவணன் மீனாட்சி ஈரமான ரோஜாவே போன்ற பல்வேறு தொடர்களில் நடித்து இருக்கிறார்.

சமீபத்தில் இவர் பாரதிகண்ணம்மா தொடரில் நடித்து வந்தார் இந்த சீரியலில் கடந்த சில வாரமாகவே இவர் கண்ணா அம்மாவை நினைத்து ஏக்கத்தில் இருந்தது போலத்தான் காண்பித்து வந்தார்கள் அதற்கு ஏற்றார் போலவே இன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் திடீர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full