சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வினுஷா நிச்சயதார்த்தம்

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வினுஷா நிச்சயதார்த்தம்

By subhashini · 18/6/2026

சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் வினுஷா தேவி. இவர் சோசியல் மீடியா மூலம் தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். இவர் டிக் டாக், இன்ஸ்டாவில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. அதன் மூலம் தான் இவருக்கு மீடியாவில் வாய்ப்பு கிடைத்தது. பின் இவர் மாடிலிங் செய்தார்.

அதன் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து இருந்தார். முதலில் இந்த ரோலில் ரோஹினி தான் நடித்தார். அவர் விலகிய பின் வினுஷா கண்ணம்மாவாக நடித்து இருந்தார். டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருந்த தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் இருந்தது.

வினுஷா குறித்த தகவல்:

இதைத்தொடர்ந்து பாரதி கண்ணம்மா 2 சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் வினுஷா கதாநாயகியாக நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து இவர் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியளராக கலந்து கொண்டிருந்தார். ஆனால் இவரால் நிகழ்ச்சியில் வெற்றி பெற முடியவில்லை. இதனிடையே வினுஷா தேவி கதாநாயகியாக N4 என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் தர்மதுரை, அனுபமா குமார், அபிஷேக் சங்கர், வடிவுக்கரசி, அழகு என பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

வினுஷா நடிக்கும் சீரியல்:

இந்த படம் முழுக்க முழுக்க காசிமேடு பகுதியில் வாழும் மீனவர்களின் வாழ்வியலை சொல்லும் படமாக எடுக்கப்பட்டு இருந்தது. இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதன் பின் வினுஷா சினிமா, சீரியல் கவனம் செலுத்தி வருகிறார். பின் வினுஷா தேவி 'பனி விழும் மலர்வனம்' என்ற சீரியலில் நடித்து இருந்தார். ஆனால், இந்த சீரியல் சீக்கிரமாகவே முடிந்தது. தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுட்டும் விழி சூடரே என்ற தொடரில் கதாநாயகியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

வினுஷா நிச்சயதார்த்தம்:

இந்த சீரியலும் நன்றாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் நடிகை வினுஷா தேவிக்கு நிச்சயதார்த்தம் நடந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இவர் லிங்கா என்பவரை தான் திருமணம் செய்ய இருக்கிறார். தற்போது இவர்கள் இருவருக்கும் தான் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. ரசிகர்கள் நடிகை வினுஷாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். அதோடு இவர்களுடைய திருமணம் தேதி குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை

Tamil Behind Talkies AMP · Quick view
View full