கதற்றவங்க கதறிக்கோங்க, இத டெலீட் பண்ண மாட்டேன் - பரீனாவின் துணிச்சலான Pregnancy போட்டோ ஷூட்.

By Rajkumar · 4/8/2021

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது.சின்னத் தம்பி பெரியதம்பி, ராஜா ராணி, மௌன ராகம், கடைக்குட்டி சிங்கம் என்று சினிமா டைட்டில்களை வைத்து ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் நல்ல வெற்றியை பெற்றது. அந்த வகையில் இதே பாணியில் சினிமா டைட்டிலை வைத்து ஒளிபரப்பாகி வரும் 'பாரதி கண்ணம்மா' சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்று வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த சீரியலின் TRP வேற லெவலில் எகிறியது.

இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து வருகிறார் நடிகை பரீனா. ஆரம்பத்தில் புது யுகம் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.மேலும், இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான அழகு என்ற தொடரில் நடித்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய புகழை ஏற்படுத்தி கொடுத்தது பாரதி கண்ணம்மா தொடர் தான்.

இதையும் பாருங்க : ப்பா, அறந்தாங்கி நிஷாவா இது - கல்லூரியில் படிக்கும் போது எப்படி இருந்துள்ளார் பாருங்க.

இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் பரீனா கர்ப்பமாக இருப்பதை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்து இருந்தார். கர்ப்பமான பின்னர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி வரும் பரீனா சமீபத்தில் தனது வயிற்றில் கூட அழகா மருதாணி வைத்து வித்யாசமான போட்டோ ஷூட்டை நடத்தி இருந்தார்.

இந்த போட்டோ ஷூட்டை பார்த்து பலர் லைக்ஸ் போட்டாலும் ஒரு சிலர் பரீனாவை திட்டி தீர்த்தனர். ஆனால், அதை பற்றியெல்லாம் கவலைப்படமால் தனது pregnancy போட்டோ ஷூட்டை நடத்தி வரும் பிரவீனா, சமீபத்தில் பாத்ரூமில் பாத் டப்பில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை பதிவிட்டு இதற்கும் நெகடிவ் கமன்ட் சொல்றன்வாங்கள பத்தி எனக்கு கவல இல்ல. இத நான் டெலீட் பண்ண மாட்டேன் என்று பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full