நடிப்பை தாண்டி புது பிசினஸ் தொடங்கிய பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை பரீனா - குவியும் வாழ்த்துக்கள்

By subhashini · 14/5/2026

நடிகை பரீனா தொடங்கி இருக்கும் புது பிசினஸ் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல், நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது. சின்னத் தம்பி ரசிகர்கள் ராஜா ராணி, மௌன ராகம், கடைக்குட்டி சிங்கம் என்று சினிமா டைட்டில்களை வைத்து ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் நல்ல வெற்றியை பெற்றது. அந்த வகையில் இதே பாணியில் சினிமா டைட்டிலை வைத்து ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் ‘பாரதி கண்ணம்மா’.

இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்றது. இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து இருந்தார் நடிகை பரீனா. இதற்கு முன் இவர் தொகுப்பாளினியாக இருந்தார். பல நிகழ்ச்சிகளில் இவர் பணியாற்றி இருக்கிறார். அதன் பின் தான் இவர் நடிக்க வந்தார். அதுவும் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் இவருக்கு மிக பெரிய ரீச் கிடைத்தது.

ப்ரீனா குறித்த தகவல்:

அதன் பின் இவர் பிற மொழி சேனலிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. அதோடு பரீனா யூடுயூப் சேனல் நடத்தி வருகிறார். இவர் வீடியோக்கள் படு வைரல். குழந்தை பிறந்த பிறகும் பரீனா சீரியல், நிகழ்ச்சி என்று பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

https://www.youtube.com/shorts/b_9zickKybs

பரீனா பிசினஸ்:

இப்படி இருக்கும் நிலையில் சீரியல் நடிகை ஃபரீனா புதிதாக பிசினஸ் தொடங்கியிருக்கும் தகவல் தான் தற்போது வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே விஜய் டிவி பிரபலங்கள் நடிப்பை தாண்டி புதிதாக பிசினஸ் தொடங்கி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பரீனா பொட்டிக் ஷாப் ஒன்று திறந்து இருக்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோ தான் வைரலாகி வருகிறது. இதை பார்த்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்

Tamil Behind Talkies AMP · Quick view
View full