மது போதையில் பெண்களுடன் குத்தாட்டம் போடும் இயக்குநர் பாரதிராஜா என்று வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் பாரதிராஜா. இவரை இயக்கத்தின் இமயம் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இவரது படைப்புகள் இருக்கிறது. மேலும், இவர் தமிழ் சினிமாவில் சிறந்த காவியமாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். மேலும், பாரதிராஜா அவர்கள் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார்.

இவர் 16 வயதினிலே என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவருடைய படங்கள் எல்லாமே கிராமத்து மண்வாசனை, உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை மையமாகக் கொண்டது.

Advertisement

பாரதிராஜா திரைப்பயணம்:

அதனால் தான் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குனராக பாரதிராஜா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இதனாலேயே இவரை இயக்குனர் இமயம் என்று அழைத்தார்கள். மேலும், தமிழ் சினிமா உலகில் ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, ஸ்ரீதேவி போன்ற பல கதாநாயகிகளை அறிமுகம் செய்து வைத்தது பாரதிராஜா தான். அதுமட்டும் இல்லாமல் இவருடைய மாணவர்களான பாக்யராஜ், பாண்டிராஜ் முதலான பல பேர் தமிழ் சினிமாவுலகில் மிக பிரபலமான இயக்குனர்களாக இருந்தனர்.

பாரதிராஜா வாங்கிய விருது:

பின் தாஜ்மஹால் படத்தில் தன்னுடைய மகனை நடிகன் ஆக்கி இருந்தார். இருந்தாலும் அவரால் தந்தை அளவிற்கு சினிமா உலகில் நிலைத்து நிற்க முடியவில்லை. மேலும், பாரதிராஜா இதுவரை ஆறு முறை தேசிய விருதும் வாங்கியிருக்கிறார். பல நடிகர்கள் இவர் இயக்கத்தில் ஒரு படமாவது நடித்துவிட மாட்டோமா? என்று ஏங்கியவர்கள் உண்டு. அந்த அளவிற்கு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். மேலும், இவருடைய ஹிட் எல்லாம் தேசிய விருது, பிலிம்பேர் விருது என பல விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிறது.

Advertisement

பாரதிராஜா நடித்த படம்:

அதோடு சமீப காலமாகவே பாரதிராஜா அவர்கள் படங்களை இயக்குவதை விட்டு நடித்து வருகிறார். தற்போது இவர் படங்களில் நடித்து கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நயன்தாரா– விக்னேஷ் சிவன் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகி இருந்த ராக்கி படத்தில் பாரதிராஜா நடித்து இருந்தார். இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி இருந்தார். படத்தில் பாரதிராஜா வேற லெவல்ல படத்தில் மிரட்டியிருக்கிறார். இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

Advertisement

குத்தடம் போட்ட பாரதிராஜா:

இந்த நிலையில் பாரதிராஜாவின் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், சினிமா துறையிலும் மக்கள் மத்தியிலும் பெரிய மதிப்புடன் இருக்கும் பாரதிரஜா அவர்கள் ஒரு இரவு பார்ட்டியில் பெண்களுடன் ஜாலியாக நடனம் போட்டு இருக்கிறார் என்று வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோ தான் தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இதை பார்த்த பலரும் மூத்த இயக்குனர் பொதுவெளியில் இப்படி நடந்து கொள்வது சரியா? என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். ஆனால், உண்மையில் இது பாரதி ராஜா தானா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Advertisement