மனோஜ் மனைவிக்கு சொத்து கிடையாது? மருமகளை விரட்டிட்டாங்க? உண்மையை சொன்ன பாரதிராஜா தம்பி

சொத்து விவகாரம் பற்றி பாரதிராஜா தம்பி சொன்னது

By subhashini · 19/6/2026

தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து இருந்தவர் பாரதிராஜா. இவரை இயக்கத்தின் இமயம் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இவரது படைப்புகள் இருந்தது. இவர் தமிழ் சினிமாவில் சிறந்த காவியமாக திகழ்ந்து கொண்டு இருந்தார். இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார். அதோடு சமீப காலமாகவே பாரதிராஜா அவர்கள் படங்களை இயக்குவதை விட்டு நடித்து வந்தார்.

இதனிடையே இவர் மகன் மனோஜ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தான் காலமானார். இவருடைய இறப்பு பாரதிராஜாவுக்கு மிகப்பெரிய துயரத்தை கொடுத்தது. பாரதிராஜா தன்னுடைய மகனின் மரணத்திலிருந்து மீண்டு வர முடியாமல் மன வேதனையில் இருந்தார். அதற்கு பிறகு பாரதிராஜாவின் உடல்நிலை சரியில்லாமல் போனதால் சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்தார். குறிப்பாக, கடந்த சில மாதங்களாகவே இவர் ரொம்பவே அவஸ்தைப்பட்டு இருந்தார்.

பாரதிராஜா மறைவு:

சில வாரங்களுக்கு முன் பாரதிராஜா சிகிச்சை பலனின்றி காலமாகினார். இவருடைய இறப்பு திரை உலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவருடைய மறைவிற்கு நடிகர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலருமே நேரில் சென்று இரங்கலை தெரிவித்தார்கள். இது ஒரு பக்கம் இருக்க, பாரதிராஜா மறைவுக்கு பின் மனோஜ் மனைவிக்கு சொத்து கிடையாது? மருமகளை விரட்டி விட்டுட்டாங்க? என்று பாரதிராஜா குடும்பத்தைப் பற்றி பலவிதமான வதந்திகள் பரவி வந்தன.

தம்பி ஜெயராஜ் பேட்டி:

முக்கியமாக, ஜனனி மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் இந்த விவகாரம் பதறி பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ், சமூக வலைதளங்களில் எதை வேண்டுமானாலும் பேசுகிறார்கள். எங்கள் குடும்பத்தைப் பற்றித் தெரியாமல் பலர் தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள். ஆயிரக்கணக்கான கோடி சொத்துக்காகப் போராட்டம் நடப்பதாகச் சொல்வதைக் கேட்கும்போது வருத்தமாக இருக்கிறது. எங்கள் குடும்பத்தைச் சிதைக்க வேண்டிய கட்டாயம் என்ன?" என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

சொத்து விவகாரம்:

மேலும், சொத்து தொடர்பான வதந்திகளைத் தகர்க்கும் விதமாக ஒரு முக்கியமான செய்தியையும் அவர் பகிர்ந்துகொண்டார். "பாரதிராஜா தனது வாழ்நாட்களிலேயே சொத்துக்களைப் பிரித்துவிட்டார்கள். மகளுக்கு ஒரு பங்கு, மருமகளுக்கு ஒரு பங்கு, மனைவிக்கு ஒரு பங்கு என மூன்று பிரிவுகளாகச் சரியாகப் பிரித்துக் கொடுத்துவிட்டார்கள். எனவே, இப்போது சொத்து விவகாரத்தில் சண்டை போட வேண்டிய சூழலே இல்லை. அண்ணி இருக்கும் வரை அவரது பங்கு அவரிடமே இருக்கும். அவர் மறைந்த பிறகு அது சட்டப்படி இரண்டு பாகங்களாகப் பிரியும். அவ்வளவுதான் விஷயம். இதைத் தவிர்த்துவிட்டு மக்கள் கற்பனையான கதைகளை உருவாக்கிப் பேசுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full