செய்பவர்கள் வீட்டில் பெண் மக்கள் இல்லையா?? அவர்கள் இதைக் கண்டிக்க மாட்டார்களா? இரண்டாம் குத்துக்கு எதிராக பாரதி ராஜா ஆவேசம்.

By Rajkumar · 8/10/2020

தமிழில் சந்தோஷ் பி இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் இளசுகள் மத்தியில் பேராதரவை பெற்றது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் 'முரட்டு குத்து' என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் சந்தோஷே ஹீரோவாக நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் ஒன்று வெளியாகி இருந்தது. அதில் நேரசியான ஆபாச வசனங்களும், ஆபாச காட்சிகளும் அதிகம் இடம்பெற்று இருந்தது.

https://www.youtube.com/watch?v=WiZ7I88h7PM

இந்த படத்தின் டீஸர் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றாலும். பெரும்பாலானோர் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த படத்திற்கு எதிரியாக பாரதி ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ' சினிமா வியாபாரமும்தான். ஆனால் வாழைப்பழத்தை குறிகளாகச் செய்து அதைக் கேவலமான பதிவோடு பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு செல்லும் நிலைக்கு அவ்வியாபாரம் வந்து நிற்பது வேதனையடையச் செய்கிறது.

இதற்காகவா இத்தனை ஜாம்பவான்கள் சேர்ந்து இந்த சினிமாவைக் கட்டமைத்தார்கள்? சினிமா வாழ்க்கை முறையைச் சொல்லலாம். தப்பில்லை. இலைமறை காய் மறையாக சரசங்கள் பேசலாம். ஆனால் இப்படி படுக்கையை எடுத்து நடுத் தெருவில் வைப்பது எந்தவிதத்தில் சரி என்பது? நான் கலாச்சார சீர்கேடு எனக் கூவும் நபரல்ல. ஆனால் என் வீட்டின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என நினைப்பவன்.கலைநயத்தோடு செய்யப்படும் எந்த படைப்பும் ஆழ விழுந்து இரசிப்பவன். ஆனால் “இரண்டாம் குத்து” என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன்.

https://twitter.com/offBharathiraja/status/1314066766398541829

இத்தமிழ் நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும்?? எத்தனை வளரிளம் பருவத்தினரிடையே கசட்டை துப்பி வைத்திருக்கும்? கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தைப் போதிக்கவா முன்வந்தோம்?இதையெல்லாம் அனுமதியின்றி வெளியிடக் கிடைத்த சுதந்திரம் என்னை பதைக்க வைக்கிறது. நாளை இன்னும் என்ன என்ன கேவலங்களை சாணியறைவார்களோ என்று கவலைகொள்கிறேன். இதையெல்லாம் செய்பவர்கள் வீட்டில் பெண் மக்கள் இல்லையா?? அவர்கள் இதைக் கண்டிக்க மாட்டார்களா?

அவர்கள் கண்டிப்பார்களோ இல்லையோ நான் இங்கிருக்கும் மூத்தவர்களில் ஒருவன் என்ற முறையில் கண்டிப்பேன்.இப்படியொரு ஆபாசம் தமிழ்த் திரையுலகிற்கு ஆகாது எனக் கண்டிக்கிறேன். இதற்கெல்லாம் கிடுக்கிப் பிடி வேண்டும் என அரசையும் சென்சார் போர்டையும் வலியுறுத்துகிறேன். சமூகச் சீர்கேடுகள் செய்யும் படத்தை அரங்கேற்றாதீர்கள்.. எத்தனை கற்பழிப்புகள்…?குழந்தைச் சிதைவுகள்? போதாதா? இப்படிப்பட்ட படங்களும் சிந்தனையும் கழிவுகளையே சாப்பாட்டுத் தட்டில் வைக்கின்றன என்பதை மக்களும் உணர்ந்துகொள்ளுங்கள்” என காட்டமாக தெரிவித்துள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full