சாய்னா நேவால், பிவி சிந்து, சான மிர்சா, தீபா கர்மாகர் என உலக அரங்கில் கலக்கிக்கொண்டிருக்கும் இந்திய வீராங்கனைகளின் வரிசையில் தற்போது தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று சாதனை பெண் மணியாக திகழ்ந்து வருகிறார் பவானி தேவி. மேலும், வட சென்னையை சேர்ந்த இவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டியின் வாள்வீச்சு பிரிவில் தகுதி பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனையை படைத்துள்ளார் பவானி தேவி.

சென்னையில் பிறந்த இவர் வீட்டின் 5வது குழந்தை. 6வது படிக்கும் போதே பள்ளியில் வாள் வீச்சு விளையாட்டை தேர்ந்தெடுத்தவர். 2004 ஆம் ஆண்டில் இருந்தே தேசிய அளவிலான போட்டியில் பங்குபெற்று வந்த பவானி, நிதியுதவி இல்லாதால் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனது. பின்னர் விடா முயற்சியால் தொடர்ந்து வாள்வீச்சு போட்டிகளில் பங்கேற்று வந்த இவர் 2014 ஆம் ஆசிய வாள்வீச்சு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

Advertisement

பின்னர் 2015 ஆம் ஆண்டு மங்கோலியாவில் நடைபெற்ற போட்டியில் வெங்களப்பதக்கம் வென்றார். 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதற்கான தகுதிச்சுற்று போட்டியான ஆசியா-ஓசியானா போட்டி சீனாவில் நடைபெற்றது. இதில், பவானி தேவி காலிறுதியில் தோற்றுப்போனார். இதனையடுத்து ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை அவர் இழந்தார். 2017 மே மாதம், ஐஸ்லாந்தில் நடைபெற்ற சர்வதேச வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் பவானி தேவி தங்கப் பதக்கம் வென்றார்.

இதையடுத்து சர்வதேச வாள்வீச்சு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்கிற பெருமையை அடைந்தார். இதற்காக அவருக்குப் பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்தார்கள். அந்த வகையில் நடிகர் சசி குமாரும் பாராட்டு தெரிவித்து இருந்தார். இதற்கு பவானியும் நன்றி தெரிவிக்கும் விதமாக சசி குமாருக்கு பதிவு ஒன்றை போட்டார். அதாவது சசி குமார், பவானி தேவிக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளாராம்.

Advertisement

6 வருடங்களுக்கு முன்னால் இத்தாலி வாள்சண்டை போட்டியில் கலந்துகொள்ள நிதியின்றி தவித்துள்ளார், இதுகுறித்து கேள்விப்பட்ட இயக்குனர் சசிகுமார், அவருக்கு சில நிதியுதவியை கொடுத்து உதவினாராம். இதையடுத்து அவர் இந்தியா சார்பில், தங்கப் பதக்கம்வென்று  சாதனை படைத்தார்.

Advertisement
Advertisement