இறப்பிற்கு முன் பெண் கல்விக்காக பவதாரணி செய்துவிட்டு சென்ற விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ் பகிர்ந்த வீடியோ.
பவதாரிணி இசையமைத்த பாடலின் வீடியோவை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. இளையராஜா அவர்கள் ஜீவா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு கார்த்திகேயன், யுவன் சங்கர் ராஜா, பவதாரணி என்ற மூன்று பிள்ளைகள் உள்ளார்கள். இவர்கள் மூவருமே தன் தந்தையைப் போல இசையில் புலமை பெற்று வருகிறார்கள். இளையராஜாவின் குடும்பமே இசை குடும்பம் தான். இளையராஜாவிற்கு பிறகு சினிமா உலகில் இசையில் நிலையான இடத்தைப் பிடித்தவர் யுவன் சங்கர் ராஜா. நான் கிம்னாஸ்டிக் பண்ணி காமிச்சேன். ஏன் நடிக்க வில்லை என்றால், எனக்கு ஏற்ற கதை வரவில்லை. அதோடு 2010 ம் ஆண்டு .நான் மீட்டிங் போய் விட்டு வரும்போது மிகப்பெரிய கார் விபத்தை சந்தித்தேன். அதில் இருந்து மயிரிழையில் உயர் தப்பினேன் என்று சொன்னால் சரியாக இருக்கும். அதிலிருந்து மீண்டு நான் உயிரோடு இருப்பேன் என்றோ, மீண்டும் சினிமாவில் நடிப்பேன் என்றோ நினைத்து கூட பார்த்தது இல்லை. , இப்படி ஒரு படம் நடிப்பேனா என்பது உலக அதிசயம் போல நடந்திருக்கிறது. இதற்கு காரணம், என்னுடைய ரசிகர்களின், தமிழக மக்களின் பிரார்த்தனைதான்..
இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா அவர்கள் தன்னுடைய அப்பாவிடமே இசை பணியை தொடர்ந்து செய்து வருகிறார். மகள் பவதாரணி அவர்கள் மைடியர் குட்டி சாத்தான் என்ற படத்தின் மூலம் பாடகியாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். இளையராஜாவின் இசையில் பாரதி திரைப்படத்தில் மயில் போல பொண்ணு ஒண்ணு என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பவதாரணி. இவர் தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளை வாங்கி உள்ளார்.
இப்படி ஒரு நிலையில் பவதாரணி உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமாக இருக்கும் சம்பவம் வெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது பவதாரணிக்கு புற்றுநோய் இருந்திருக்கிறது இதற்காக அவர் சமீப காலமாக இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார். கிட்டத்தட்ட கடந்த ஐந்து மாதங்களாக அவர் இலங்கையில் சிகிச்சை மேற்கொண்டு வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் கடந்த ஜனவரி 26ஆம் தேதி காலை 5 மணி அளவில் அவர் காலமாகி இருந்தார்அவருக்கு வயது 47.
https://twitter.com/Anbil_Mahesh/status/1791048946481352884
பவதாரிணியின் இறப்பிற்கு பலரும் தங்கள் இரங்கலை நேரில் சென்று தெரிவித்தனர். இப்படி ஒரு நிலையில் 'பெண்-கல்வி, உரிமைகள், விடுதலை’ எனும் தலைப்பில் விழிப்புணர்வு பாடல் ஒன்றிற்கு பவதாரிணி இசையமைத்து. அந்த வீடியோ பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் 'தமிழர்களின் பெருமை அய்யா இசைஞானி இளையராஜாஅவர்களை அன்பின் நிமித்தமாக சந்தித்தோம். பெண் கல்வியையும், பெண் உரிமையையும் வலியுறுத்தும் விதமாக தமிழநாடு பள்ளிக்கல்வி -ஆல் ‘பெண்-கல்வி, உரிமைகள், விடுதலை’ எனும் தலைப்பில் விழிப்புணர்வு பாடல் தயாரிக்கப்பட்டது. அப்பாடல் உருவாக்கத்தில் சகோதரி பவதாரிணி அவர்களின் இசை பங்களிப்புக் குறித்து நன்றியோடு எடுத்துரைத்தோம். அன்போடு வரவேற்று இசையோடு எங்களை வழியனுப்பி வைத்தார்' என்று குறிப்பிட்டுள்ளார்.
பவதாரிணி பாடகி மட்டுமல்ல பல படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். அதிலும் இவர் இசையமைத்த முதல் படமே இங்கிலிஷ் படம்தான். அதாவது ரேவதி இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான Mitr, My Friend என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளாராகவும் அறிமுகமாகி இருக்கிறார் பவதாரிணி. அதனை தொடர்ந்து தமிழ், கன்னடம், இந்தி என்று பல மொழிகளில் 10 படங்களுக்கு இசைமைத்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.