சென்னைக்கு கொண்டு வந்த பவதாரணி உடல், கண்ணீரோடு வாங்கிய யுவன் சங்கர் ராஜா- வைரலாகும் வீடியோ

By subhashini · 26/1/2024

தற்போது சோசியல் மீடியா முழுவதும் இளையராஜா மகள் பவதாரணி இறப்பு செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. இளையராஜா அவர்கள் ஜீவா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு கார்த்திகேயன், யுவன் சங்கர் ராஜா, பவதாரணி என்ற மூன்று பிள்ளைகள் உள்ளார்கள். இவர்களும் தன் தந்தையைப் போல இசையில் புலமை பெற்று வருகிறார்கள்.

இளையராஜாவின் குடும்பமே இசை குடும்பம் தான். மேலும், இளையராஜாவின் மகள் பவதாரணி அவர்கள் மைடியர் குட்டி சாத்தான் என்ற படத்தின் மூலம் பாடகியாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். பின் இளையராஜாவின் இசையில் பாரதி திரைப்படத்தில் மயில் போல பொண்ணு ஒண்ணு என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பவதாரணி. இந்த பாடலுக்காக இவர் தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளை வாங்கி இருந்தார்.

பவதாரணி குறித்த தகவல்:

பின் இவர் தமிழில் எண்ணற்ற பாடல்களை பாடியிருந்தாலும் அவர் குறிப்பாக தன்னுடைய தந்தை மற்றும் சகோதரர் படங்களில் தான் அதிகம் பாடியிருக்கிறார். இவர் பாடுவது மட்டும் இல்லாமல் பல படங்களுக்கு இசையமைத்தும் இருக்கிறார். இதனிடையே இவர் சபரி ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர்களுக்கு குழந்தையே இல்லை. சபரி ராஜன் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் பவதாரணி பெயரிலேயே வாங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பவதாரணி உடல்நிலை:

இப்படி ஒரு நிலையில் பவதாரணி உடல் நலக்குறைவு காரணமாக காலமாகி இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பவதாரணிக்கு புற்றுநோய் இருந்திருக்கிறது. இதற்காக இவர் சமீப காலமாக இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார். கிட்டத்தட்ட கடந்த ஐந்து மாதங்களாக அவர் இலங்கையில் சிகிச்சை மேற்கொண்டு வந்து இருக்கிறார். அதேபோல் இளையராஜாவும் இலங்கையில்தான் இருந்திருக்கிறார்.

பவதாரணி இறப்பு:

இவர் 28ஆம் தேதி வரை இருக்கும் மியூசிக் கான்செர்ட் நடைபெறுவதால் இவர் தன்னுடைய மகளை கவனித்துக் கொண்டு தன்னுடைய இசை வேலையும் செய்து இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் மூச்சு திணறல் ஏற்பட்டு பவதாரணி உயிரிழந்திருக்கிறார். தற்போது அவருக்கு வயது 47. மேலும், இவருடைய இறப்பு கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பலரும் இளையராஜா குடும்பத்துக்கு இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

View this post on Instagram

A post shared by Polimer News (@polimernews)

வீடியோ வைரல்:

இந்நிலையில் இன்று மாலை சென்னை விமான நிலையத்திற்கு பவதாரணியின் உடல் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதை வாங்குவதற்கு அவருடைய உடன் பிறந்த சகோதரர்களான கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா இருவரும் விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார்கள். அவர்களை தொடர்ந்து பிரபலங்கள் பலரும் அந்த இடத்திற்கு வந்திருக்கிறார்கள். தற்போது இது தொடர்பான வீடியோ தான் வைரலாகி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full