பவதாரிணியின் கடைசி ஆசையாக இருந்தது இதுதான்‌- எமோஷனலாக கணவர் சபரிராஜ் சொன்ன விஷயம்

By krithika · 25/1/2025

மறைந்த பிரபல பாடகி பவதாரிணியின் கடைசி ஆசை குறித்து அவரது கணவர் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. இளையராஜாவின் இயற்பெயர் ராசய்யா. இவர் 1976 ஆம் ஆண்டு 'அன்னக்கிளி' என்ற திரைப்படத்தில் இசை அமைத்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானர். இவர் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார்.

இவர் தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் இசையமைத்து உள்ளார். இவருடைய இசை திறமைக்கு பல விருதுகளை வாங்கி உள்ளார். அதுமட்டும் பல இளையராஜா அவர்கள் நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமை பெற்றும், முறையாக பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சினிமா உலகில் இசையமைப்பாளர், கவிஞர், பாடகர் என பல முகங்களைக் கொண்டவர்.

பவதாரிணி குறித்து:

இதற்கிடையே இளையராஜா அவர்கள் ஜீவா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இளையராஜாவிற்கு கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா என்கிற இரண்டு மகன்கள் இருகிறார்கள். இவர்கள் இருவரும் இசையமைப்பாளர்களாக பணியாற்றி வருகிறார்கள்.பவதாரிணி என்ற ஒரு மகள் இருந்தார். பவதாரிணி தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடி இருக்கிறார். இவர் காதலுக்கு மரியாதை, நேருக்கு நேர், அநேகன், இரும்பு குதிரை, பிரியாணி, மங்காத்தா, ஃப்ரண்ட்ஸ், தனம், பிதாமகன் என்று பல படங்களில் பாடல்களைப் பாடி ஹிட் கொடுத்திருக்கிறார்.

தேசிய விருது:

குறிப்பாக இவர் எனது தந்தை இளையராஜா மற்றும் சகோதரர்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா இசையில் பல பாடல்களை பாடி இருக்கிறார். அதோடு இவர் தனது தந்தையின் இசையில் பாரதி என்னும் படத்தில் பாடிய 'மயில் போல பொண்ணு ஒன்னு' என்ற பாடலுக்கு சிறந்த பின்னணி பாடகிக்காண தேசிய விருது பெற்றார் என்பது தான் சுவாரஸ்யமான விஷயம். மேலும், இவர் ஒரு சில படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.

பவதாரிணி மறைவு:

இந்த நிலையில் தான் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இதே நாளில் புற்றுநோய் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வந்த பவதாரிணி மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக அவர் இலங்கையில் சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில் அவர் உயிரிழந்தார். அதற்குப்பின் அவரது உடல் இந்தியா கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரின் மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். இன்றோடு அவர் மறைந்து ஒரு வருடம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பவதாரிணியின் கடைசி ஆசை:

தற்போது பவதாரிணியின் கணவர் சபரி ராஜ், பவதாரிணி கடைசியாக ஆசைப்பட்ட விஷயம் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். அதில், பவதாரிணிக்கு உடல் மோசம் அடைந்த நிலையில் இலங்கைக்குச் சென்றோம். அங்க மிகவும் உடல்நிலை மோசமடைய மீண்டும் இந்தியாவிற்கு திரும்ப தயாராகி வந்தோம். அந்த நேரத்தில்தான் இசை நிகழ்ச்சிக்கு இளையராஜா இலங்கை வருவதாக இருந்தது. அப்போது அவரைப் பார்க்க வேண்டும் என்று பவதாரிணி ஆசைப்பட்டார். அவரின் ஆசைப்படியே அவரது அப்பா இளையராஜாவை பவதாரிணி பார்த்தார். ஆனால், அதுதான் அவரது கடைசி ஆசையாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று பகிர்ந்திருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full