'இந்த நாளை மறக்கவே முடியாது' - 44வது பிறந்தநாளை மன நிறைவோடு கொண்டாடிய 90ஸ் கிட்ஸ்சின் பேவரைட் நாயகி.

By Siva · 23/8/2022

ஆதரவற்றோர் இல்லத்தில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி இருக்கும் நடிகை பூமிகாவின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் பூமிகா. இவர் சில படங்களில் நடித்தாலும் மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்து இருக்கிறார். இவர் டெல்லியை சேர்ந்தவர். இவர் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். இவர் 2000ம் ஆண்டில் வெளிவந்த யுவகுடு என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருந்தார். பின் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த ‘பத்ரி’ என்ற படத்தில் பூமிகா நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தமிழில் இவர் ரோஜாக்கூட்டம், சில்லுனு ஒரு காதல் என்று சில படங்களில் நடித்திருந்தாலும் என்றென்றும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், பஞ்சாபி, போஜ்புரி என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார்.

பூமிகா திரைப்பயணம்:

இவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் பிற மொழி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். மேலும், இறுதியாக தமிழில் 2019 ஆம் ஆண்டு வெளியான கொலையுதிர் காலம் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனிடையே பூமிகா தான் நீண்ட நாட்களாக காதலித்து வந்த பாரத் தாகூர் என்பவரை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் இவர் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டு குடும்பத்தை கவனித்து வந்தார்.

பூமிகா ரீ என்ட்ரி:

பின் மீண்டும் தெலுங்கு படங்களில் ரீ என்ட்ரி கொடுத்து நடித்து இருக்கிறார் பூமிகா. இருந்தாலும், இவர் படங்களில் குணசித்திர வேடங்களில் தான் நடித்து வருகிறார். அதோடு இவர் தோனி என்ற படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்த படம் அவருக்கு மீண்டும் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கி தந்தது. பின் உதயநிதியின் ‘கண்ணை நம்பாதே’ படத்தில் நடித்து இருந்தார். மலையாளத்திலும் அனுபமா பரமேஸ்வரனுடன் பட்டர்ஃப்ளை நடித்து இருக்கிறார்.

பூமிகா நடிக்கும் படங்கள்:

தற்போது பூமிகா அவர்கள் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தங்கி திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார் பூமிகா. இந்த நிலையில் இவருடைய பிறந்த நாளை ஊட்டியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். மேலும், அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்ததுடன் மட்டுமல்லாமல் பூமிகாவே உணவையும் பரிமாறியிருக்கிறார்.

பூமிகா பிறந்தநாள்:

பின் அவர்களுடன் சேர்ந்து நடனமாடி தன்னுடைய பிறந்தநாளை சந்தோஷமாக கொண்டாடி இருக்கிறார். இது தொடர்பாக நடிகை பூமிகா அவர்கள் கூறி இருந்தது, இந்த எளிய மக்களுடன் என்னுடைய பிறந்தநாளை கொண்டாடி இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. என் வாழ்நாளில் மறக்க முடியாத பிறந்த நாளாக இது இருந்தது. எளிய மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்வேன் என்று கூறியிருந்தார். இப்படி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தும் தன்னுடைய பிறந்தநாளை சமூக அக்கறையுடன் நடிகை பூமிகா கொண்டாடி இருப்பது ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full